twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புத்தகத்தை தலைகீழாக பிடித்த ஸ்ரீதேவி மகள்: மரணமாக கலாய்த்த நெட்டிசன்ஸ்

    By Siva
    |

    Recommended Video

    Actress Jhanvi Kapoor: ஜான்வி கபூர் இஷான் கட்டர் மீதுள்ள நட்பு- வீடியோ

    டெல்லி: புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜான்வி கபூரை பலரும் கிண்டல் செய்துள்ளனர்.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹரிந்தர் சிக்கா எழுதிய காலிங் செஹ்மத் என்கிற புத்தகத்தின் இந்தி பதிப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

    Janhvi Kapoor trolled for holding book upside down

    டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஜான்வி புடவை கட்டி அழகாக இருந்தார். ஆனால் புத்தகத்தை வெளியிட்டபோது அதை அவர் தலைகீழாக பிடித்திருந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

    அந்த புகைப்படங்களை பார்த்த சமூக வலைதளவாசிகளோ ஜான்வியை மரண கலாய் கலாய்த்துள்ளனர். யாராவது புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகத்தை தலைகீழாக பிடித்துக் கொண்டு போஸ் கொடுப்பார்களா. ஜான்விக்கு அழகு மட்டும் தான் உள்ளது அறிவு இல்லை. அம்மா பிரபல நடிகை, அப்பா தயாரிப்பாளர் என்பதால் ஜான்வி நடிகையாகிவிட்டார். இவர் ஸ்ரீதேவி மகள் தானா என்று சமூக வலைதளவாசிகள் ஜான்வியை விளாசியுள்ளனர்.

    ஜான்வி புத்தகத்தை தலைகீழாக பிடித்ததில் தவறு இல்லை. தவறு செய்வது மனித இயல்பு. அதற்காக எல்லாம் அவரை கிண்டல் செய்வது நியாயம் இல்லை என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். ஜான்வி சேலையில் எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    காலிங் செஹ்மத் புத்தகத்தின் அடிப்படையில் தான் ஆலியா பட் நடித்த ராசி படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்வி தற்போது தனக்கு மிகவும் பிடித்த ராஜ்குமார் ராவுடன் சேர்ந்து ரூஹி ஹஃப்சா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர கார்த்திக் ஆர்யன் நடிக்க உள்ள தோஸ்தானா 2 படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க உள்ளார்.

    ஜான்வி ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படம் மூலம் கோலிவுட் வரப் போவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தல 60 படத்தை ஜான்வியின் தந்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

    English summary
    Netizens troll Janhvi Kapoor for holding book upside down at a book launch event held in Delhi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X