என்னம்மா பேண்ட் போட மறந்துட்டீங்களேம்மா: ஸ்ரீதேவி மகளை கலாய்த்த ரசிகர்கள்
மும்பை: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று நடிகை ஜான்வி கபூரை ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி நடித்த முதல் படமான தடக் வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் பிரபல இயக்குனர் கரண் ஜோஹாரின் தக்த் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் கரணின் மற்றொரு படத்திலும் ஜான்வி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி சர்ட்
நிகழ்ச்சி ஒன்றில் பிங்க் நிற கவுன் அணிந்து கலந்து கொண்டார் ஜான்வி. நிகழ்ச்சி முடிந்த கையோடு அவர் டி-சர்ட், ஷார்ட்ஸ் அணிந்தார். டி-சர்ட் நீளமாக இருந்ததால் அவர் அணிந்திருந்த ஷார்ட்ஸ் அவ்வளவாக தெரியவில்லை. அவர் டி-சர்ட்டில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

கலாய்
அந்த புகைப்படத்தை திடீர் என்று பார்த்தால் ஜான்வி வெறும் டி-சர்ட் அணிந்திருப்பது போன்று தான் தெரிகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா ஜான்வி, பேண்ட் போட மறந்துவிட்டீர்களே. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று மரண கலாய் கலாய்த்துள்ளனர். முன்பும் கூட அவர் இப்படி உடை அணிந்ததால் கிண்டலுக்கு ஆளானார்.

இப்படியா?
சின்னப் பெண்ணாக இருந்து கொண்டு இப்படியா ஆடை அணிவது. ஒரு டிரஸ்ஸிங் சென்ஸ் வேண்டாமா என்று நெட்டிசன்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். அவருக்கு பிடித்திருக்கிறது, அவரின் அப்பா ஒன்றும் சொல்லவில்லை, உங்களுக்கு என்ன வந்தது என்று சிலர் ஜான்விக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

பேண்ட்
இது 21வது நூற்றாண்டு, பேண்ட் அணியத் தேவையில்லை. பெண்கள் டி-சர்ட் மட்டும் போட்டுக் கொண்டு வெளியே செல்லலாம் என்று ஜான்விக்கு ஆதரவு குரல்களும் எழுந்துள்ளது. ஜான்வி அவரின் நடிப்பை விட உடைக்காக தான் அதிகம் பேசப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











