Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
தென்னிந்தியாவுல இந்த நடிகரோட நடிக்கத்தான் ஜான்விக்கு ஆசையாம்.. யார் அந்த ஹீரோ தெரியுமா?
மும்பை : பாலிவுட்டின் இளம் ஹீரோயின்களில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார் ஜான்வி கபூர்.
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் -ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் குட் லக் ஜெர்ரி படம் ஓடிடியில் ரிலீசானது.
இந்தப் படம் தமிழில் நயன்தாரா நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2018ல் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.
அம்பத்தூர்
சிக்னலில்
ஷூட்டிங்,
அடையாளம்
தெரியாத
சந்தானம்...காரணங்கள்
சொல்லும்
இயக்குநர்
ரத்னகுமார்

பாலிவுட் முன்னணி நடிகை
பாலிவுட்டில் கடந்த 2017ல் நடிகையாக அறிமுகமான ஜான்வி கபூர், தொடர்ந்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். இளம் நடிகைகளில் இவர் சிறப்பான இடத்தை பிடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த வாரத்தில் குட் லக் ஜெர்ரி படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

குட் லக் ஜெர்ரி படம்
இந்தப் படத்தில் ஜான்வியின் நடிப்பு சிறப்பான விமர்னங்களை பெற்றது. நடிகை நயன்தாராவும் ஜான்விக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழில் கோலமாவு கோகிலா என்ற பெயரில் நயன்தாரா நடித்திருந்த இந்தப் படம் கடந்த 2018ல் வெளியானது. இதனிடையே இந்த கோகிலா என்ற கேரக்டர் தனது மனதிற்கு நெருக்கமானது என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாரா பாராட்டு
மேலும் குட் லக் ஜெர்ரியில் ஜான்வியின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும் அந்த கேரக்டரில் அவரைத் தவிர யாராலும் சிறப்பாக பொருந்தியிருக்க முடியாது என்றும் நயன்தாரா ஜான்விக்கு பாராட்டு தெரிவித்ததாக ஜான்வி தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் சிறப்பான நடிகையாக வலம்வரும் ஜான்வி தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார்.

தென்னிந்திய மொழிகளில் நடிக்க விருப்பம்
ஜான்வியின் தந்தை போனி கபூரும் தற்போது அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக தமிழ்ப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தென்னிந்திய மொழிகளிலும் ஜான்வி விரைவில் நாயகியாக அறிமுகமாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஜூனியர் என்டிஆருடன் நடிக்க விருப்பம்
இதனிடையே தென்னிந்திய மொழிகளில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடிக்க விரும்புவதாகவும் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். ஜூனியர் என்டிஆர் ஒரு லெஜண்ட் என்றும் அவருடன் இணைந்து நடிக்க தனக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.