ஜூனியர் என்.டி.ஆர் - ஜான்வி கபூர் கெமிஸ்ட்ரி அள்ளுதே.. தேவரா பாடலுக்கு செம ரெஸ்பான்ஸ்
ஹைதராபாத்: தெலுங்கின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் இப்போது தேவாரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமாகிறார். ஜான்வியின் முதல் படம் என்பதால் இந்தப் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவிவரும் சூழலில் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் ஜான்வியின் அழகை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கொடிக்கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவர் முதலில் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா உள்ளிட்டவைகளை ரூல் செய்து பிறகு ஹிந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கு சென்றும் தனது திறமையாலும், அழகாலும் சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார். அங்கு அவர் பிஸியாக இருந்தபோதே தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். போனிக்கு ஸ்ரீதேவி இரண்டாவது மனைவி. அவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

ஜான்வி கபூர்: துபாயில் ஒரு ஹோட்டலில் ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்த வருடத்திலேயே ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக ஹிந்தியில் அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும்; புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபிக்கும்வகையில் ஜான்வியின் நடிப்பு அந்தப் படத்தில் பரவலாக பேசப்பட்டது.
அடுத்தடுத்த வாய்ப்புகள்: அந்தப் படத்துக்கு பிறகு ஜான்வியின் நடிப்பில் ஒரு வருடம் படம் வெளியாகவில்லை. பிறகு 2020ஆம் ஆண்டு கோஸ்ட் ஸ்டோரிஸ், கஞ்சன் சக்சேனா கார்கில் கேர்ள் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அந்தப் படங்களுக்கு பிறகு தொடர்ந்து ஜான்விக்கு வாய்ப்புகள் கிடைக்க; கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் வளர ஆரம்பித்தார். இப்போது அவர் பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க ஹீரோயின்களில் ஒருவராக வலம்வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பான் இந்தியா ஹீரோயின்: ஸ்ரீதேவி எப்படி பான் இந்தியா ஹீரோயினாக கலக்கினாரோ அதேபோல் ஜான்வியும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் கண்டிப்பாக விரைவில் அவர் தமிழில் அறிமுகமாவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இப்போது தெலுங்கில் அறிமுகமாகியிருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் தேவரா 1 படத்தில் நடிக்கிறார்.
இரண்டாவது சிங்கிள்: செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியான சூழலில் இப்போது இரண்டாவது சிங்கிள் ரிலீஸாகியிருக்கிறது. இந்தப் பாடலுக்கு ஜூனியர் என்.டி.ஆரும், ஜான்வி கபூரும் ரொமான்ஸோடு செம டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். இதனைப் பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே பாஸ் என்று கமெண்ட்ஸ் செய்து அந்தப் பாடலை ட்ரெண்டாக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications