போன வருஷம் இருந்த அம்மா இப்போ இல்லையே: ஸ்ரீதேவி மகள் உருக்கம்

By Siva

பனாஜி: கடந்த ஆண்டு இருந்த அம்மா தற்போது இல்லையே என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடந்து வரும் சர்வதசே திரைப்பட விழாவில் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தனது தந்தை போனி கபூருடன் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் ஜான்வி தனது தாயின் நினைவாக எழுதிய கவிதையை வாசித்தார்.

அம்மா

அம்மா

கடந்த ஆண்டு இந்த விழாவுக்கு நான் அம்மாவுடன் வந்தேன். ஆனால் இந்த ஆண்டு அம்மா இல்லை. இது குறித்து எதுவும் பேச கஷ்டமாக உள்ளது. இந்த ஆண்டு என் வாழ்வில் சிறந்த மற்றும் மோசமான அனுபவங்கள் கிடைத்துள்ளது. என் குடும்பம் தற்போது ஒன்றாகிவிட்டது. அது எனக்கு மிகப் பெரிய விஷயம்.

படங்கள்

படங்கள்

அம்மா போனதை இன்னும் நம்ப முடியவில்லை. நாங்கள் இன்னும் அதிர்ச்சியில் தான் உள்ளோம். எங்களிடம் அன்பு செலுத்தும் அனைவருக்கும் நன்றி. எனக்கு படங்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். என் பெற்றோரை பெருமை அடைய வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

அழகு

அழகு

எனக்கு பிடித்த நடிகை மதுபாலா. அவர் அழகை கவனித்தவர்கள் அவரின் நடிப்பை கவனிக்கத் தவறிவிட்டனர். முகல் இ அசாம் படத்தில் மதுபாலாவை தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். திலீப் குமார், குரு தத் ஆகியோர் எனக்கு பிடித்த நடிகர்கள் என்றார் ஜான்வி.

ஹிட்

ஹிட்

ஜான்வி நடிப்பில் வெளியான முதல் படமான தடக் ஹிட்டானது. தடக் படப்பிடிப்பு துவங்கிய போது இருந்த ஸ்ரீதேவி அதை பார்க்க உயிரோடு இல்லை. ஸ்ரீதேவி இறந்தபோது ஜான்வி தடக் படப்பிடிப்பில் இருந்தார். இயக்குனர் கரண் ஜோஹார் தான் அவரிடம் விஷயத்தை கூறி சித்தப்பா அனில் கபூரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகள்

கடந்த ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தனது மகள், கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் ஸ்ரீதேவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X