இப்ப எங்கம்மா இல்லையே: கண் கலங்கிய ஸ்ரீதேவியின் மகள்
Recommended Video

மும்பை: சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்ச்சியின்போது அம்மாவை நினைத்து கண் கலங்கியுள்ளார் ஜான்வி கபூர்.
நடிகை ஸ்ரீதேவி இறந்த பிறகு கபூர் குடும்பத்தில் நடந்த முதல் திருமணம் நடிகை சோனம் கபூரின் திருமணம் தான். பெரியம்மா ஸ்ரீதேவி இல்லாததால் தனது திருமணத்தை எளிமையாக நடத்துமாறு சோனம் தன் தந்தையும், நடிகருமான அனில் கபூரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் திருமண நிகழ்ச்சியின்போது ஸ்ரீதேவியின் மகள்கள் அவரை ரொம்பவே மிஸ் செய்துள்ளனர்.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவிக்கு மெஹந்தி போட்டுக் கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்ச்சியின்போது அம்மாவை நினைத்து கண்கலங்கியுள்ளார் ஜான்வி கபூர்.

ஜான்வி
ஸ்ரீதேவிக்கு திருமணமானதில் இருந்து அவருக்கு யார் மெஹந்தி வைத்தாரோ அவர் தான் சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்ச்சியிலும் அனைவருக்கும் மெஹந்தி வைத்துள்ளார். மெஹந்தி வைத்துவிட்டவரின் பெயர் வீணா நாக்தா.

வீணா
ஸ்ரீதேவிக்கு நான் தான் மெஹந்தி வைத்துவிடுவேன். அதனால் ஜான்வி, குஷிக்கு என்னை நன்றாக தெரியும். நான் ஜான்விக்கு முதன்முதலாக மெஹந்தி வைத்துவிட்டபோது அவருக்கு 2-3 வயது இருக்கும். ஸ்ரீதேவி போன்றே ஜான்விக்கும் மெஹந்தி வைத்துக் கொள்ள மிகவும் பிடிக்கம் என்று வீணா தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி
ஸ்ரீதேவியின் முதல் கர்வாசவுத்துக்கு நான் தான் அவருக்கு மெஹந்தி வைத்துவிட்டேன். அவரின் மரண செய்தி அறிந்தபோது யாரோ வதந்தி பரப்புகிறார்கள் என்று நினைத்தேன். கர்வாசவுத்தின்போது மெஹந்தி வைத்துக் கொள்ள ஸ்ரீதேவி எவ்வளவு ஆர்வம் காட்டுவார் என்பது இன்னும் என் கண் முன்னே உள்ளது என்கிறார் வீணா.

குஷி
ஜான்வியும், குஷியும் தங்களின் அம்மா போன்றே மெஹந்தி வைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்ச்சியில் ஆசைப்பட்டு மெஹந்தி வைத்துக் கொண்டார்கள். சோனம் கபூருக்கு 6 வயதில் இருந்து நான் தான் மெஹந்தி வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று வீணா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











