என்னால் முடியவே முடியாது, விட்டுடுங்க ப்ளீஸ்: ஸ்ரீதேவியின் மூத்த மகள் கண்ணீர்
Recommended Video

மும்பை: ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு கபூர் குடும்பத்தில் நடக்கும் முதல் நல்ல காரியத்தில் ஜான்வி நடனமாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி மகளான பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை நாளை திருமணம் செய்து கொள்கிறார்.
நேற்று மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் இன்று சங்கீத் நிகழ்ச்சி நடக்கிறது.

குஷி
தாய் ஸ்ரீதேவியை இழந்து தவிக்கும் ஜான்வி கபூரும், குஷி கபூரும் மெஹந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இன்று நடக்கும் சங்கீத் நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் பட பாடலுக்கு ஜான்வி நடனமாடுவார் என்று கூறப்பட்டது.

முடியாது
அம்மா பட பாடலுக்கு என்னால் நடனமாட முடியாது என்று ஜான்வி கபூர் தெரிவித்துவிட்டாராம். அவரின் சந்தோஷம் தான் முக்கியம் என்பதால் அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லையாம். ஸ்ரீதேவியின் தேசிய விருதை வாங்க டெல்லி சென்ற இடத்தில் கூட அம்மாவை நினைத்து ஜான்வி அழுதுவிட்டார்.

சோனம்
பாலிவுட்டில் நடிக்க வந்ததில் இருந்து சோனம் கபூர் உடை அணியும் விதம் அனைவரும் பிடிக்கும். தனது உடை அணியும் விதத்திற்கு பின்னால் பெரியம்மா ஸ்ரீதேவி இருப்பதாக முன்பு சோனம் தெரிவித்திருந்தார்.

பிரமாண்டம்
பெரியம்மா இறந்த நிலையில் நடக்கும் இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டாம் என்று சோனம் தனது தந்தை அனில் கபூரிடம் கறாராக தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











