ஶ்ரீதேவி மகள் ஜான்வி மறுத்துட்டாராமே... நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக இன்னொரு ஹீரோயின்
மும்பை: விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க, ஶ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டா, தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை புரி ஜெகநாத் இயக்குகிறார். இந்த படத்துக்கு ஃபைட்டர் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

கரண் ஜோஹர்
இதை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் இந்தியிலும் உருவாகிறது. இந்தியில் கரண் ஜோஹர் தயாரிக்கிறார்.

தற்காப்பு கலை
இந்தப் படத்துக்காக, தாய்லாந்தில் 15 நாட்கள் சிறப்பு தற்காப்பு கலையை கற்றுத் திரும்பி இருக்கிறார் விஜய தேவரகொண்டா. இதில் ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்பட்டது.

ஜான்வி கபூர்
இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அவர் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்காக அவருக்கு ரூ.3.5 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

அனன்யா பாண்டே
இந்நிலையில் இதில் நடிக்க மறுத்துவிட்டாராம். ஏற்கனவே கியாரா அத்வானியும் கால்ஷீட் பிரச்னையால் மறுத்துவிட்ட நிலையில், இப்போது அனன்யா பாண்டே நடிக்க உள்ளதாக தெரிகிறது. படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











