சிம்பு ஜோடியாக நடிக்கிறாரா ஸ்ரீதேவியின் மகள்?: அப்போ கீர்த்தி?
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் கை கோர்த்துள்ளார். வெங்கட் பிரபு படத்தில் சிம்பு கடத்தல்காரராக நடிக்கவில்லையாம்.
சிம்புவுக்காக புதுக்கதையை தயார் செய்துள்ளாராம் வெங்கட் பிரபு.

ஹீரோயின்
சிம்புவுக்கு ஜோடியாக நடிக்குமாறு கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. கீர்த்தி நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாரா இல்லையா என்பது குறித்து தகவல் இல்லை.

ஜான்வி
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வியை சிம்புவுக்கு ஜோடியாக்கப் பார்க்கிறாராம் வெங்கட் பிரபு. இது குறித்து ஜான்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

சிம்பு
சிம்பு படத்தில் இரண்டு ஹீரோயின்களா அல்லது கீர்த்திக்கு பதில் தான் ஜான்வியா என்பது தெரியவில்லை. அதை வெங்கட் பிரபு தான் தெளிவுபடுத்த வேண்டும்.

சென்டிமென்ட்
தன் அம்மாவை நடிகையாக்கி வளர்த்துவிட்ட தமிழ் திரையுலகில் இருந்து வந்துள்ள வாய்ப்பை சென்டிமென்ட் கருதி ஜான்வி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











