ஸ்டேஜ் டான்சரில் இருந்து டான்ஸ் மாஸ்டர்... ஷங்கர் படத்தில் இணைந்த ஜானி மாஸ்டர் கெத்து
சென்னை : தளபதி விஜய் படத்தில் டான்ஸ் மாஸ்டராக இணைந்துள்ளார் ஜானி மாஸ்டர்.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் மற்றும் ராம்சரணின் ஆர்சி15 படத்திலும் அவர் பணியாற்ற உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2வது கட்ட சூட்டிங்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் இரண்டாவதுகட்ட சூட்டிங் சென்னையில் கடந்த 1ம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

வைரலான புகைப்படங்கள்
அனிருத் இசையில் இந்த படத்தில் ஜானி மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. நடிகர் விஜய் மட்டுமின்றி பூஜா ஹெக்டேவும் சிறப்பாக நடனம் ஆடுபவர்கள்.

இணைந்த ஜானி மாஸ்டர்
அவர்களுக்கு ஈடுகொடுத்து ஜானி மாஸ்டர் சிறப்பான நடன அசைவுகளை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷங்கர் -ராம்சரண் கூட்டணியில் உருவாகவுள்ள ஆர்சி15 படத்திலும் ஜானி மாஸ்டர் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முக்காபுலா பாடலில் ஸ்டேஜ் டான்சர்
ஷங்கரின் பாய்ஸ் படத்தில் 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களும் ஒருவராக பின்னணி டான்சராகவும் முக்காபுலா பாடலில் ஸ்டேஜ் டான்சராகவும் பணியாற்றிய தான் தற்போது ஷங்கரின் படத்தில் நடன இயக்குநராக இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான வாய்ப்புகள்
மேலும் தன்னுடைய விருப்பத்திற்குரிய ஹீரோ ராம்சரணுக்காக பணியாற்றுவதை சிறப்பாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை நம்பி இத்தகைய பொறுப்பை அளித்ததற்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். ராம்சரணும், தயாரிப்பாளர் தில்ராஜூவும் எப்போதும் தனக்கு சிறப்பான வாய்ப்புகளை அளித்து வருவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











