»   »  அந்த காட்சியில் நடிப்பதற்கு நான் சீரியலில் இருந்து விலகிவிடுவேன்: நடிகை ஆவேசம்

அந்த காட்சியில் நடிப்பதற்கு நான் சீரியலில் இருந்து விலகிவிடுவேன்: நடிகை ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அந்த காட்சியில் நடிக்க மாட்டேன்- வீடியோ

மும்பை: முத்தக் காட்சியில் நடிப்பதற்கு பதில் தொலைக்காட்சி சீரியலில் இருந்து விலகிவிடுவேன் என்று நடிகை ஜன்னத் ஜுபைர் தெரிவித்துள்ளார்.

இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொலைக்காட்சி தொடரான து ஆஷிகியில் 16 வயதே ஆன ஜன்னத் ஜுபைர் நடித்து வருகிறார். சக நடிகருடன் முத்தக் காட்சியில் நடிக்குமாறு கூறியுள்ளனர்.

உடனே அவரது அம்மா சீரியல் இயக்குனர், தயாரிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நீக்கம்

நீக்கம்

ஜன்னத் சீரியலில் இருந்து நீக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் ஜன்னத் நடிக்க மாட்டார் என்று அவரின் பெற்றோர் தெரிவித்துவிட்டனர்.

விளக்கம்

விளக்கம்

ஒரு சீரியலின் ஹீரோயின் சில காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் எனக்கு 16 வயது தான் ஆகிறது. 25 வயது பெண் செய்வதை நான் செய்ய முடியாது என்கிறார் ஜன்னத்.

நெற்றி

நெற்றி

கை அல்லது நெற்றியில் முத்தம் கொடுக்கச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் ரொம்ப ஓவராக கேட்கிறார்கள். ரொம்பவே நெருக்கமான முத்தக் காட்சியில் நடிக்கச் சொல்கிறார்கள். அதில் எனக்கு சவுகரியம் இல்லை என்று ஜன்னத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

என்னை சமூக வலைதளத்தில் பல டீனேஜர்கள் பின் தொடர்கிறார்கள். அவர்களுக்கு நான் தவறான பாதையை காட்டிவிடக் கூடாது. அனைத்துக்கும் ஒரு வயது இருக்கிறது. பல பெற்றோர் இயக்குனருக்கு எதிராக பேச மாட்டார்கள். ஆனால் என் பெற்றோர் பேசியதில் பெருமைப்படுகிறேன் என்று ஜன்னத் கூறியுள்ளார்.

சீரியல்

சீரியல்

சக நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு பதில் நான் சீரியலில் இருந்து வெளியேறிவிடுவேன். நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று ஆரம்பத்திலேயே தெரிவித்தும் நடிக்கச் சொல்கிறார்கள் என்கிறார் ஜன்னத்.

English summary
Tu Aashiqui actress Jannat has opened up about the intimate scene issue. She said, "I understand that a leading lady is expected to do certain things, but I am just 16. I can't do what a 25-year-old would. I was clear that I'd rather quit the show than perform intimate scenes with my co-actor."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X