Mankatha Re Release Date: தல வர்றாரு.. தள்ளி போங்க.. தேதி குறிச்சாச்சு.. திருவிழாவுக்கு ரெடியா ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான மங்காத்தா படம் அரவது திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம். இந்த படம் அவரது 50 வது படம். கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் ரீ ரிலீஸ்க்காக அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தார்கள். அப்படி இருக்கும்போது, அஜித் ரசிகர்களின் பல ஆண்டு கால கோரிக்கையை படக்குழு நிறைவேற்றி உள்ளது. அதாவது படத்தை வரும் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

January 23rd Ajith Kumar 50th Movie Mankatha Will Re Release Date Announced By Sun Pictures

மங்காத்தா: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் குமாரின் 50வது படமாக வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற படம் மங்காத்தா. கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம், 15 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அஜித் நடிப்பில் உருவான தீனா, அட்டகாசம் உள்ளிட்ட பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருந்தாலும் மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்யச் சொல்லி ரசிகர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பு நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்தார்கள். இந்த கோரிக்கை தொடர்ந்து பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. இப்படி இருக்கும்போது ரீ ரிலீஸ் செய்யும் படங்களையும் அதிகப்படியான ரசிகர்கள் பார்க்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் எனும் போது, மங்காத்தா படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

100க்கு 100: மங்காத்தா படத்தில் அஜித் வில்லனா - கதாநாயகனா என்ற சந்தேகம் எல்லோருக்குமே வரும். காரணம் படத்தின் மையக் கதாபாத்திரம் அஜித், ஆனால் அஜித் எல்லா வில்லத்தனங்களையும் செய்து கொண்டு இருப்பார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிரமாதமான கதை, மிரட்டலான திரைக்கதை என மொத்த படமும் 100க்கு 100 மார்க் வாங்கும் அளவுக்கு இருந்தது. அதுவும் யுவன் சங்கராஜாவின் பின்னணி இசை எல்லாம் சொல்லவே வேண்டியதில்லை. அஜித் என்றாலே ஓபனிங் தான் என்று திரைத்துறையில் ஒரு பேச்சு உள்ளது. அது வரும் 23ஆம் தேதி ரீ ரிலீஸில் ஒபனிங் என்றாலும் அது அஜித் தான் என்று கூறும் அளவுக்கு, மங்காத்தா ரீ ரிலீஸை மாற்றும் அளவுக்கு அஜித் ரசிகர்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.

தியேட்டர் அதிர: படத்தின் பல காட்சிகளுக்கு ரசிகர்கள் தியேட்டரை அதிர வைக்கப்போவது உறுதி. குறிப்பாக செஸ் போர்ட் காட்சி, பைக் வீலிங் காட்சி, அர்ஜுன் உடன் மொபைலில் உரையாடும் காட்சி என பல காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அஜித் ரசிகர்களுக்கு கிங் மேக்கர் விநாயக் மகாதேவ்-ஐ திரும்பவும் திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X