Blue Sattai Maran: "ரெண்டுங்கெட்டான் படமா எடுத்துருக்காங்க..” ஜப்பான் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
சென்னை: கார்த்தி நடிப்பில் ராஜூ முருகன் இயக்கியுள்ள ஜப்பான் திரைப்படம் நேற்று வெளியானது. தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான ஜப்பான் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.
ஆனால், ஜப்பான் படத்துக்கு முதல் நாளில் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இந்நிலையில், “படம் ஆரம்பிச்சதுமே இது மொக்கை என தெரிந்துவிட்டதாக” ஜப்பான் மூவி குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.

ஜப்பான் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெளியானது. கார்த்தியுடன் அனு இம்மானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து ஜப்பான் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படம் குறித்து நெகட்டிவாக விமர்சனம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
அதாவது, “இந்தப் படத்தோட கதைய பத்தி பார்க்கணும்ன்னா, கோயம்புத்தூர்ல ஒரு பெரிய நகை கடைல 200 கோடி ரூவா நகையை அடிச்சிட்டு போய்டுறாங்க. அங்க இருக்குற தடையத்தெல்லாம் வச்சு பாக்கும் போது, ஜப்பான் தான் கொள்ளையடிச்சிட்டான்னு ஹீரோவ தேட ஆரம்பிக்குறாங்க. ஒரு பாயிண்ட்ல தான் தெரியவருது ஹீரோவுக்கு, அவரு பேர பயன்படுத்தி எவனோ ஒருத்தன் அடிச்சிட்டு போய்ட்டான்னு.”
”இப்போ அந்த எவனோ ஒருத்தன போலீஸும் தேடுது, ஹீரோவும் தேடுறாரு. அதுக்கப்புறம் என்னாச்சுங்குறது தான் இந்தப் படத்தோட கதையே. இந்தப் படத்துல வர ஹீரோ கேரக்டர் உண்மையிலேயே நிஜத்துல வாழ்ந்த ஒருத்தர் தான். அந்த கேரக்டர் பத்தி சமீபத்துல டிவில, பேப்பர்ல கூட பார்த்திருக்கலாம். திருச்சில உள்ள பிரபலமான நகைக் கடைல சுவத்துல ஓட்டைய போட்டு பெரிய தொகைய அடிச்சிட்டுப் போஎய்டுச்சு அந்த கேரக்டர்.”
”அந்த கேரக்டர் மேல சுமார் 110க்கும் அதிகமான வழக்குகள் இருக்கு. அந்த கேரக்டர் இன்ஸ்பயர் பண்ணி தான் ஜப்பான் படம் பண்ணிருக்காங்க. அதெல்லாம் கூட பிரச்சினை இல்ல, ஆனா அத ராவா எடுத்துருக்கணும். அல்லது கலர்ஃபுல்லான சினிமாவா எடுத்து வச்சிருக்கணும். அப்படி இல்லாம ரெண்டுங்கெட்டான் படமா எடுத்து வச்சிருக்காங்க. ஒரு நல்லவனோட கதையா இருந்தா அத நாலு வரில சொல்லிடலாம். அதுல எந்த சுவாரஸ்யமும் இருக்காது.”
“ஆனா இந்த மாதிரி ஒரு பெரிய திருடனோட வாழ்க்கைய படமா எடுக்கும் போது நிறைய இண்ட்ரஸ்டிங்கான விஷயம் இருக்கும். அவன் எப்படி திருடுனான், எப்படி பெரிய திருடன் ஆனான், அவன் எப்படிலாம் தப்பிச்சான், போலீஸ் எப்படிலாம் தேடுனாங்க, திருடனோட குடும்ப வாழ்க்கை எப்படி இருந்துச்சு, எப்படிலாம் என்ஜாய் பண்ணான் இப்படிலாம் எடுத்துருக்கலாம். ஆனா இவங்க ஜப்பான் எப்பேற்பட்ட திருடன் தெரியுமா, எப்படியான தில்லாலங்கடி தெரியுமான்னு டயலாக்ல தான் சொல்லிட்டு இருக்காங்கலே தவிர, ஹீரோ எப்படி புத்திசாலித்தனமா திருடுனாங்கன்னு காட்டல.”
“அப்புறம் அவர் திருடுடன காச வச்சிட்டு எப்படிலாம் என்ஜாய் பண்ணாங்கன்னா, சினிமா எடுத்தார், உல்லாசமா இருந்தார்ன்னு மேம்போக்கா காட்டிருக்காங்க. அதேமாதிரி ஹீரோவ போலீஸ் தேடி வர்றதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமா இருக்கு. படத்துக்கு ரொம்ப சுவாரஸ்யமான கதைய செலக்ட் பண்ணிட்டு, அதுல எதுலாம் சுவாரஸ்யமான விஷம்ன்னு தெரியாம மொக்கையான்ன ஏரியாவ மட்டும் படமா எடுத்து வச்சிருக்காங்க.”
”அதேபோல், இங்குள்ள டைரக்டர்கள் பொதுவா எந்தப் படமா இருந்தாலும் கருத்து சொல்லணும்ன்னு நினைக்குறாங்க. இது யாரு சொல்லிக்கொடுத்த விதின்னு தெரியல, எல்லா படத்துலயும் ட்ரை பண்றாங்க. ஆனால், எந்த இங்லீஷ் படத்துலயாவது கருத்து சொல்லிட்டு இருக்காங்களா?” என விளாசியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். மேலும், ஒருத்தன் நல்லவனா திருந்தி வாழ்றதாவும் இன்னொருவன் கெட்டவனா இருக்குறதாவும் காட்டுறாங்க. இத ரெண்டையும் பேலன்ஸ் பண்றது இன்னும் மோசமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஹீரோவின் அம்மா ப்ளாஷ்பேக் சுத்தமாக புரியவில்லை எனவும் விமர்சித்துள்ளார். முக்கியமாக தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மொக்கை படம் என்பதை இடைவேளைக்குப் பின்புதான் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால், ஜப்பான் படம் தொடங்கியதுமே இது மொக்கை என சொல்லிடலாம். ஜப்பான் சொன்னாலே தரமான பொருள்ன்னு சொல்லுவாங்க, ஆனா இந்தப் படத்துல திரைக்கதை, காமெடி, சாங், ஆக்ஷன் என எதுவுமே தரமா இல்லாம எடுத்து வச்சிருக்காங்க. இந்தப் படத்துக்கு ஜப்பான் டைட்டில் வைக்காம சைனான்னு வச்சிருக்கலாம் எனவும் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











