Japan Box Office Day 2: வசூலில் தடுமாறும் ஜப்பான்... இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!
சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது.
ராஜூ முருகன் இயக்கிய இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
ஜப்பான் கார்த்தியின் 25வது படமாக வெளியானதால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கலவையான விமர்சனங்களே கிடைத்த ஜப்பான், பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வருவதாக சொல்லப்படுகிறது.

ஜப்பான் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்: கார்த்தியின் 25வது படமாக உருவான ஜப்பான், இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்தப் படம், உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. கார்த்தியுடன் அனு இம்மானுவேல், சுனில் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் தொடர்ச்சியாக வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார், பொன்னியின் செல்வன் 2 ஆகிய திரைப்படங்கள் அவருக்கு மிகப் பெரிய ரீச் கொடுத்தது. இதனால், ஜப்பான் படத்துக்கும் அதே அளவிலான எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி இந்தப் படத்திற்கு முதல் நாளில் ஓரளவு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனால், விமர்சன ரீதியாக ஜப்பானுக்கு வரவேற்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.
கார்த்தி மட்டுமே தனது நடிப்பால் ஒன்மேன் ஆர்மியாக படத்தை தூக்கி சுமந்துள்ளார். மற்றபடி, கதை, திரைக்கதை, மேக்கிங் போன்றவை சுமார் ரகம் என்றே ரசிகர்கள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும், ஜப்பான் கார்த்தியின் 25வது படமாக இருந்திருக்கக் கூடாது எனவும் கருத்துத் தெரிவித்தனர். இதனால், பாக்ஸ் ஆபிஸிலும் ஜப்பானுக்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லையாம்.
இந்தப் படம் முதல் நாளில் 4.15 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கார்த்தியின் படங்களில் மிக குறைவான ஓபனிங் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இரண்டாவது நாளில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜப்பான் படத்தின் இரண்டாவது நாள் கலெக்ஷன் 3 கோடி ரூபாய் மட்டுமே என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகமொத்தம் முதல் இரண்டு நாட்களையும் சேர்த்து 7.15 கோடி ரூபாய் மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளது ஜப்பான். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் சர்தார், 100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஆனால், இந்தாண்டு ஜப்பான் திரைப்படத்தின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது. இன்று தீபாவளி என்பதால், ஜப்பான் வசூல் அதிகரிக்கும் என படக்குழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











