Japan Box Office Day 3: தீபாவளி தினமும் ஏமாற்றம் தான்... ஜப்பான் மூன்றாவது நாள் வசூல் ரிப்போர்ட்!

சென்னை: ரஜூ முருகன் இயக்கிய ஜப்பான் திரைப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார்.

கார்த்தியின் 25வது படமான ஜப்பான், தீபாவளி ஸ்பெஷலாக 10ம் தேதி வெளியானது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை.

இதனால் பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வரும் ஜப்பான், தீபாவளி தினத்திலும் வசூலில் மாஸ் காட்டவில்லை.

 Japan Box Office Day 3: Karthis Japan film has collected Rs 4 crore on its third day

ஜப்பான் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்: கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோக்களில் கார்த்தி தான் டாப் எனலாம். விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். இதனால் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்தப் படத்தில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், சுனில், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், தீபாவளி ஸ்பெஷலாக கடந்த 10ம் தேதி வெளியான ஜப்பானுக்கு முதல் நாளில் மட்டுமே ஓபனிங் இருந்தது. அப்போதும் கூட பாக்ஸ் ஆபிஸில் 4.15 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. முதல் நாளில் கார்த்தியின் படங்களுக்கு நல்ல ஓபனிங் கிடைத்து வந்த நிலையில், ஜப்பானுக்கு அது இல்லை என்றே சொல்லப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகின.

மேலும், ஜப்பான் கதை, திரைக்கதை, மேக்கிங் ஆகியவை ட்ரோல் செய்யப்பட்டன. இன்னொரு பக்கம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால் இரண்டாவது நாளிலும் ஜப்பான் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதன்படி ஜப்பான் படம் இரண்டாவது நாளில் 3 கோடி மட்டுமே கலெக்‌ஷன் செய்துள்ளது.

இந்நிலையில், நேற்று தீபாவளி தினம் என்பதால், ஜப்பான் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதும் பாக்ஸ் ஆபிஸில் குறைவாகவே வசூலித்துள்ளது ஜப்பான். அதாவது முதல் நாளை விட குறைவாகவே கலெக்‌ஷன் செய்துள்ளது. அதன்படி, தீபாவளி தினத்தில் கூட 4 கோடி ரூபாய் மட்டும் வசூல் செய்துள்ளது. ஆனால், முதல் நாள் கலெக்‌ஷன் 4.15 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகமொத்தம் மூன்று நாட்களில் ஜப்பான் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கார்த்தியின் 25வது படமாக வெளியான ஜப்பான், மாஸ் ஹிட்டாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வருவதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X