Japan: “ஜப்பான் தர லோக்கல் மூவி... ஆனா மேக்கிங்ல சம்பவம் இருக்கு..” கார்த்தி கொடுத்த ட்விஸ்ட்!

சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கார்த்தியின் கேரக்டர் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜப்பான் திரைப்படம் குறித்து தனது சமீபத்திய பேட்டியில் கார்த்தி மனம் திறந்துள்ளார். அதில், ஜப்பான் தர லோக்கல் மூவியாக இருந்தாலும், அதில் தரமான சம்பவம் இருப்பதாக ட்விஸ்ட் வைத்துள்ளார்.

 Japan: Karthi reveals that Japan film will be of international standards

ஜப்பான் அப்டேட் கொடுத்த கார்த்தி : கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களுமே கார்த்திக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும், அவருக்கு கை கொடுத்தது. இதனால், தற்போது அவர் நடித்து வரும் ஜப்பான் திரைப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் ஆகியோர் நடிக்கும் ஜப்பான், தீபாவளிக்கு வெளியாகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதனையடுத்து ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் போன்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக கார்த்தியே சில அப்டேட்கள் கொடுத்து அசத்தியுள்ளார்.

அதில், ஜப்பான் திரைப்படம் கண்டிப்பாக சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம். அதனால் தான் பொன்னியின் செல்வனில் ஒர்க் பண்ண ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், ஜப்பான் படத்திற்கும் சினிமோட்டோகிராபி செய்ய வேண்டும் என விரும்பினேன். நான் நினைத்தது போல ஜப்பானில் அது ஒர்க்அவுட் ஆகியுள்ளது. மேலும், படத்தின் வெற்றிக்கு கை கொடுக்கும் என நம்புகிறேன் என கார்த்தி கூறியுள்ளார்.

மேலும், ஜப்பான் ஸ்டோரி லைன் தர லோக்கலாக பக்கா கமர்சியலாக இருக்கும் என்றுள்ளார். அதேபோல், க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெயின்மெண்டாக இருக்கும். இதனால், ஜப்பான் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட அதிகமாகியுள்ளது என கார்த்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து கார்த்தியின் ஜப்பான் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

அதேபோல், கைதி 2ம் பாகம் கண்டிப்பாக உருவாகும் எனவும், அதுபற்றிய அப்டேட் வர கொஞ்சம் தாமதமாகும் என்றும் கூறியுள்ளார். மேலும், கைதி 2 ரோலக்ஸ் என பெயர் மாறலாம் என்றும், சூர்யாவும் இணைந்து நடிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஜப்பான் படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி, 96 பிரபலம் ப்ரேம் குமார் ஆகியோரின் படங்களில் நடிக்கும் கார்த்தி, அதன்பின்னர் கைதி 2, சர்தார் 2 உட்பட மேலும் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X