Japan Box Office - ஜப்பான் படுத்தேவிட்டார் ஐயா.. 5ஆவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?.. கார்த்திக்கு மரண அடி?

சென்னை: Japan Box Office (ஜப்பான் பாக்ஸ் ஆபிஸ்) கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தின் ஐந்தாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜுமுருகன். அடிப்படையில் இவர் பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். முதல் படத்திலேயே இரண்டு பார்வை மாற்று திறனாளிகளுக்குள் இருக்கும் காதலை அழகாக காட்சிப்படுத்தி கவனம் ஈர்த்தார். அதனையடுத்து இவர் இயக்கிய ஜோக்கர் படமும் மெகா ஹிட்டானது. தொடர்ந்து ஜீவாவை வைத்து இயக்கிய ஜிப்ஸி அடி வாங்கியது.

Japan Movie 5th day Box office Collection Details

ஜப்பான்: இந்த சூழலில் இவர் நான்காவது படமாக கார்த்தியை வைத்து ஜப்பான் படத்தை இயக்கியிருக்கிறார். இது கார்த்திக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியுடன் அனு இம்மானுவேல், விஜய் மில்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வெளியானது.

நெகட்டிவ் விமர்சனம்: தீபாவளிக்கு வந்த நான்கு படங்களிலேயே இந்தப் படத்தின் மீதுதான் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதிக ஆர்வத்துடன் ரசிகர்கள் படம் பார்க்க முதல் நாள் சென்றனர். ஆனால் இந்தப் படம் கார்த்தி ரசிகர்களையே திருப்திப்படுத்த தவறிவிட்டது. ஒன்லைன் சுவாரசியமாக இருந்தாலும் அதை ராஜுமுருகன் படமாக்கிய விதம் நன்றாக இல்லை என ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார்கள் ரசிகர்கள்.

வசூல் நிலவரம்: படத்துக்கு முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வர தொடங்கின. இருந்தாலும் முதல் நாள் வசூலில் படம் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்படி முதல் நாள் 4 கோடி ரூபாய்வரை வசூலித்த படம் இரண்டாவது நாள், மூன்றாவது நாளில் படிப்படியாக குறைந்து நான்காவது நாளின் முடிவில் ஒரு கோடி ரூபாய்வரை வசூலித்து மொத்தம் 12 கோடி ரூபாய் வசூல் என்ற நிலையில் இருந்தது.

5ஆவது நாள் வசூல்: இந்நிலையில் ஜப்பான் படத்தின் ஐந்தாவது நாளான நேற்றின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, நேற்று ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாக வசூல் செய்திருப்பதாகவும் அதன் காரணமாக படத்தின் மொத்த வசூல் ஐந்து நாட்களின் முடிவில் 13 கோடி ரூபாயை நெருங்குவதற்கே திணறிக்கொண்டிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X