Japan: ஹீரோ காமெடியன் வில்லன்... மிரட்டும் கார்த்தியின் ஜப்பான் டீசர்... தீபாவளி ரிலீஸ் கன்ஃபார்ம்
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான கார்த்தி இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
கார்த்தியின் பிறந்தநாளுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கார்த்தியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்து வரும் ஜப்பான் படத்தில் இருந்து அப்டேட்ஸ் வெளியாகியுள்ளன.
அதன்படி இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ள படக்குழு, கார்த்தியின் இன்ட்ரோ வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
ஜப்பான் மேன் இன் இந்தியா:கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான கார்த்தி, இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில், கார்த்தியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்து வரும் ஜப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் அயலான் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதேபோல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் தீபாவளி ரிலீஸை கன்ஃபார்ம் செய்துள்ளது. இன்னொரு பக்கம் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கார்த்தியின் ஜப்பான் தீபாவளிக்கு வெளியாகாது என செய்திகள் வெளியாகின. ஆனால், அதெல்லாம் வாய்ப்பே இல்ல ராசா, ஜப்பான் தீபாவளி ரிலீஸ் தான் என அபிஸியலாக அறிவித்துவிட்டது. இதனால் கார்த்தி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த சர்ப்ரைஸுடன் கார்த்தியின் இன்ட்ரோ வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 'யார் இந்த ஜப்பான்' என்ற டைட்டிலில் இந்த டீசர் வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
"அவன் பாவ மன்னிப்புக்கு அப்பாற்பட்டவன் ஃபாதர், ஆண்டவரோ அதிசய பிறவில அவன் ஒரு ஹீரோ ஃபாதர்" என தொடங்குகிறது இந்த டீசர். பின்னர் காமெடியன் எனவும், டர்ட்டி வில்லன் என்றும் மாறி மாறி பில்டப் கொடுக்கும் வசனங்களுடன் கார்த்தி என்ட்ரியாக, "ஜப்பான்... மேட் இன் இந்தியா" என மாஸ் காட்டுகிறது. கார்த்தியின் இந்த மஸ்ஸான இன்ட்ரோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
4 மொழிகளில் உருவாகியுள்ள ஜப்பான் ப்ரோமோ வீடியோவை தமிழில் சிம்புவும், மலையாளத்தில் துல்கர் சல்மானும் வெளியிட்டுள்ளனர். அதேபோல், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவும், கன்னடத்தில் ரிஷப் ஷெட்டியும் வெளியிட்டு கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஜப்பான் டீசரை பார்க்கும் போது, இந்தப் படம் கொள்ளைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது.
கடந்தாண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது. அதேபோல், ஜப்பான் படமும் வசூலில் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை ராஜூ முருகன் இயக்கி வருகிறார், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











