twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜப்பானில், ராம் சரண் தேஜா பெயரில் ‘பிஸ்கெட்’ அறிமுகம்

    |

    டோக்கொயோ : ராம் சரண் தேஜாவின் புகழைப் பயன் படுத்தி ஜப்பானில் புதிய பிஸ்கெட் ஒன்று அறிமுகமாகியுள்ளதாம்.

    'முத்து' படம் வந்த புதிதில் ஜப்பானில் ரஜினி பிரபலமானார். இப்போது அவருக்கு அடுத்தபடியாக ' மஹாதீரா' படம் மூலம் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவும் ஜப்பானில் பிரபலமாகி வருகிறார்.

    இதனால், ராம் சரண் தேஜாவை வைத்து காசு பார்க்க ஆசைப்பட்ட பிஸ்கெட் கம்பெனி ஒன்று புதிய பிஸ்கெட் ஒன்றை அவரது பெயரிலேயே அறிமுகப்படுத்தியுள்ளது.

    ஜப்பானில் ராம் சரண்...

    ஜப்பானில் ராம் சரண்...

    சமீபத்தில் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் நடித்த ‘மஹதீரா' சப் டைட்டில் சகிதமாக ஜப்பானில் வெளியானது. அதில், ராம் தேஜாவின் அழகையும், நடிப்பையும் பார்த்து வியந்த ஜப்பானியர்கள் பலர் அவரது தீவிர ரசிகர்களாகி விட்டார்களாம்.

    சரண் லவ் கிரீம் பிஸ்கெட்...

    சரண் லவ் கிரீம் பிஸ்கெட்...

    இதை தங்களுக்கு சாதகமாக மாற்ற முடிவெடுத்த ஜப்பானின் பிரபலமான உணவு தயாரிப்பு நிறுவனம் தனது புதிய தயாரிப்பான பிஸ்கெட் ஒன்றின் கவரில் ராம் சரண் தேஜாவின் புகைப்படத்தை போட்டுள்ளதோடு, பிஸ்கெட் பெயரையும் ‘ சரண் லவ் கிரீம் பிஸ்கெட்' என்றே வைத்துள்ளனராம்.

    ஜப்பான் ரசிகர்கள் மனதில்...

    ஜப்பான் ரசிகர்கள் மனதில்...

    உலகம் முழுவதுமே தமிழ்படங்களுக்கென தனி ரசிகர் வட்டாரம் இருக்கத்தான் செய்கிறது. சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த படியாக ஜப்பான் திரைப்பிரியர்களின் மனதில் பசைப் போட்டு ஒட்டிக் கொண்டவர் ராம் சரண் தேஜா தானாம்.

    விரைவில் பாலிவுட்டில்...

    விரைவில் பாலிவுட்டில்...

    இப்போதைக்கு ஜப்பான் வரை பரவியுள்ள ராம் தேஜாவின் புகழ் விரைவில் உலகம் முழுவதும் பரவும், விரைவில் எங்கள் தலைவரை பாலிவுட்டிலும் பார்த்து ரசிக்கலாம் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Ram Charan Tej is already making news, as far away as Japan. Sources close to the actor reveal, he was glad to know that a leading food manufacturer in Japan recently printed his photo on its biscuit packets and named the product after him as a tribute to the actor’s popularity in the country.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X