twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜப்பான் படம் பார்க்க ஆசையா - ஜப்பானிஸ் பிலிம் பெஸ்டிவலுக்கு வாங்க

    |

    Recommended Video

    Japanese Film Festival : ஜப்பானிஸ் பிலிம் பெஸ்டிவலுக்கு வாங்கோ-வீடியோ

    சென்னை: ஜப்பான் திரைப்பட திருவிழா வரும் நவம்பர் 8ஆம் தேதி முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை சென்னையில் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த கொண்டாட்டத்தில் ஜப்பானிய திரைப்படங்கள், பிரபலமான மால்களான PVR, ICON, VR MALL உள்ளிட்ட இடங்களில் திரையிடப்படவிருக்கிறது. இந்த ஜப்பான் திரைப்பட திருவிழா, இந்திய இணை துணை இயக்குநர்களுக்கு இந்த விழா ஒரு கொண்டாட்டமாக அமையப்போகிறது.

    இதற்கான நுழைவு கட்டணம் இலவசம். திரைப்படத்திற்கான பாஸ்கள் அந்தந்த குறிப்பிட்ட மால்களில் படம் திரையிடப்படும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வழங்கப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து ஜப்பானிய திரைப்படங்களும் ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்படும்.

    ஜப்பான் இயக்குநர்களில் மிகவும் பிரபலமானவர் மற்றும் உலக புகழ்பெற்றவர் அகிரா குரோசாவா. இவர் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட திறமையாளராக விளங்கியவர்.

    Japanese Film Festival will be held at Chennai

    தமிழ் சினிமா, இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவை சேர்ந்த கலைஞர்கள், இயக்குநர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் சினிமாவை சார்ந்த பலரும் அகிரா குரோசாவாவை பற்றி பல ஆராய்ச்சிகள் நடத்தியுள்ளனர். அவரின் தனித்துவமான இயக்கும் முறை தான் அவருக்கு இந்த அளவிற்கு புகழை பெற்று தந்துள்ளது.

    பிளாக் அண்ட் ஒயிட் காலத்திலேயே, பல வித்தியாசமான ஜப்பானிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். திரையுலகையே புரட்டி போடும் அளவிற்கு பல விசித்திரமான ஸ்கிரிப்ட்களை உருவாக்கியவர்.

    சமீபத்தில், நம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் அகிரா குரோசாவாவின் கல்லறைக்கு சென்று, அங்கே வெகு நேரம் அவரின் கல்லறை அருகே இருந்ததாக செய்திகள் வெளியாகி வைரலானது அனைவரும் அறிந்ததே. இந்த சம்பவம் மூலம் அகிரா குரோசாவா மீது மிஷ்கினிற்கு இருக்கும் அன்பும் மரியாதையும் வெளிப்பட்டது.

    மேலும் ஜப்பானிய திரைப்படங்கள் எப்போதும் உணர்வுபூர்மாக இருக்கும். மனதை நெகிழவைக்கக் கூடிய கதைகளாக இருக்கும். குடும்பம், அன்பு, பாசம், காதல், உண்மையான உன்னதமான நேசம் இவை அனைத்தையும் மிக அழகாக, நேர்த்தியாக வெளிப்படுத்தும்.

    அன்பை எப்படி திரைப்படங்களில் வெளிப்படுத்துகிறார்களோ, அந்த அளவிற்கு வன்மம், துரோகம், கொடூரம், பழி வாங்குதல் இவற்றையும், ஒரு இயல்பான மனிதன் எப்படி வெளிப்படுத்துவனோ, அதே போல் மிகவும் எதார்த்ததுடன் வெளிப்படுத்தும் ஜப்பானிய திரைப்படங்கள் எத்தனையோ உள்ளன.

    ஜப்பான் சினிமாவில் எத்தனையோ திறமையான, வித்தியாசமான படைப்புக்களை வழங்கும் இயக்குநர்கள் இருப்பினும், ஏன் அந்த திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்படாமல், அவர்கள் மட்டுமே அதை கொண்டாடி வருகிறார்கள்.

    ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே அதிகாரபூர்மாக அந்த திரைப்படங்களின் உரிமத்தை பெற்று அதனை ரீமேக் அல்லது மொழிமாற்றம் செய்கிறார்கள். ஜப்பான் திரைப்படங்கள் மட்டுமின்றி சீன திரைப்படங்கள் மற்றும் கொரியன் திரைப்படங்கள் பல ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.

    சிலர் அதிகாரபூர்வமாக உரிமையை பெற்று ரீமேக் செய்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் உரிமையை பெறாமல் எடுத்ததால் பல பிரச்சனைகளுக்கும், சிக்கல்களுக்கும் ஆளாகியுள்ளனர். எனவே ஜப்பான் சீனா, கொரியன் திரைப்படங்கள் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளது. இந்த திரைப்படங்கள் நம் இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக படைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஜப்பான் திரைப்பட திருவிழா, இந்திய இணை துணை இயக்குநர்களுக்கு இந்த விழா ஒரு கொண்டாட்டமாக அமையப்போகிறது.

    அவர்கள் மட்டுமின்றி ஆன்லைன் சினிமா விமர்சகர்கள், இணையதளங்கள், திரைத்துறையை சார்ந்த நடிகர்கள், இவர்கள் அனைவருக்கும் இந்த விழா ஒரு சிறப்பான கொண்டாட்டமாக இருக்கப்போகிறது. சினிமா ரசிகர்கள் அனைவரும் இந்த திருவிழாவை முன்னிட்டு ஜப்பான் சினிமாவை ரசிக்கலாம்.

    சென்னைக்குள் படையெடுக்கவிருக்கிறது ஜப்பானிய திரைப்படங்கள். கேட்கவே புதுசா இருக்குதுல. ஆமாம் இந்திய திரைப்படங்களையே பார்த்து ரசித்த நமது இந்திய மக்களின் ஆர்வத்தை வித்தியாசமான கோணத்தில் தீர்ப்பதற்காக ஜப்பானிய திரைப்படங்களின் திருவிழா சென்னையில் நவம்பர் 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கொண்டாடப்படவிருக்கிறது.

    தீபாவளி ரிலீஸில் எனக்கு பிடிச்சது தளபதியோட துப்பாக்கி தான் - திவ்யதர்ஷினிதீபாவளி ரிலீஸில் எனக்கு பிடிச்சது தளபதியோட துப்பாக்கி தான் - திவ்யதர்ஷினி

    ஜப்பானிஸ் பிலிம் பெஸ்டிவல் என்ற இந்த கொண்டாட்டம் நமது சென்னையின் பிரபலமான மால்களான PVR, ICON, VR MALL உள்ளிட்ட இடங்களில் திரையிடப்படவிருக்கிறது.

    இதற்கான நுழைவு கட்டணம் இலவசம். திரைப்படத்திக்கான பாஸ்கள் அந்தந்த குறிப்பிட்ட மால்களில் படம் திரையிடப்படும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வழங்கப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து ஜப்பானிய திரைப்படங்களும் ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்படும்.

    ஒன்று இரண்டு ஷோக்கள் மட்டுமல்ல, எத்தனை முறை வேண்டுமானாலும் அனைத்து படங்களையும் கண்டு களிக்கலாம். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி சினிமா ரசிகர்கள் தங்களின் ஜப்பானிய திரைப்படம் பார்க்கும் தாகத்தை தீர்த்து கொள்ளலாம்.

    English summary
    The Japanese Film Festival will be held in Chennai from November 8th to November 17th. The festival will be screened in Japanese films, including popular malls such as PVR, ICON and VR MALL. The festival is going to be a celebration for the co-directors of India, Japan Film Festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X