தயாரிப்பாளர் கில்டு தேர்தல்... ஜாக்குவார் தங்கத்தின் பொற்கால அணி போட்டி
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஜாக்குவார் தங்கம் போட்டியிடுகிறார்.
சென்னை: ஜூன் மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தலைமையிலான பொற்கால அணி போட்டியிடுகிறது.
தமிழ் சினிமாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைப் போலவே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கமும் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கு கடந்த 2013ம் ஆண்டு தான் கடைசியாக தேர்தல் நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு போன்ற காரணங்களால் அதன்பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் திரைப்பட மற்றம் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டுக்கு தேர்தல் நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், ஓய்வுப் பெற்ற நீதிபதி கே.என்.பாஷாவை தேர்தல் ஆணையராக நியமித்தது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என பாஷா அறிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் ஜாக்குவார் தங்கம் தலைமையிலான பொற்கால அணி போட்டியிடுகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜாக்குவார் தங்கம், "மிகவும் பழைமை வாய்ந்த இந்த அமைப்பு சிறு தயாரிப்பாளர்களுக்கு பல நன்மைகளை செய்து வந்தது. ஐந்தாண்டுகள் கழித்து தேர்தல் நடத்தப்படுவதால் உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமாகியுள்ளோம்.
இந்த தேர்தலில் எனது தலைமையிலான பொற்கால அணி அனைத்துப் பதவிகளுக்கும் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன்."
இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











