»   »  பஞ்சாபில் இருந்து வந்து விஜய் ரசிகர்களை மெர்சலாக்கிய 'சிங்'

பஞ்சாபில் இருந்து வந்து விஜய் ரசிகர்களை மெர்சலாக்கிய 'சிங்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பஞ்சாபை சேர்ந்த ஜஸ்கரண் சிங் ஆளப்போறான் தமிழன் பாடலை அழகாக பாடி அசத்தினார்.

மெர்சல் படத்தில் வந்த ஆளப்போறான் தமிழன் பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. இந்நிலையில் அந்த பாடலை பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த ஜஸ்கரண் சிங் என்பவர் அழகாக பாடியுள்ளார்.

Jaskaran Singh impresses Vijay fans

ஜீ தொலைக்காட்சியில் நடந்த சரிகமப மெகா ஆடிஷனில் ஜஸ்கரண் கலந்து கொண்டு ஆளப் போறான் தமிழன் பாடலை பாடினார். அவர் தமிழில் பாடியதை கேட்டு நடுவர்கள் அசந்து போனார்கள்.

தான் இசையை காதலிப்பதால் எந்த மொழியாக இருந்தாலும் தன்னால் பாட முடியும் என்று ஜஸ்கரண் நம்பிக்கையுடன் தெரிவித்தார். தமிழ் மொழி தெரியாத ஜஸ்கரண் தமிழில் பாடியது விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

ஒரே நாளில் ஜஸ்கரண் தமிழகத்தில் பிரபலமாகிவிட்டார் என்றே கூற வேண்டும்.

English summary
A young man from Punjab has sung Aalaporan Tamizhan song from Mersal at the mega audition of Saregamapa programme for Zee Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X