போற போக்கை பார்த்தால் பொங்கலுக்கு விஜய் மகன் படம் வந்துடும் போல.. ‘சிக்மா’ டீசர் ரிலீஸ் அப்டேட்!
சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ள 'சிக்மா' படத்தின் அட்டகாசமான டீசர் நாளை வெளியாகும் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் டீசரே இன்னும் வெளியாகாத நிலையில், சிக்மா படத்தின் டீசர் அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் விட்டா படமே பொங்கலுக்கு வந்துவிடும் போல தெரிகிறதே என பதிவிட்டு வருகின்றனர்.

சந்தீப் கிஷனும் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வெறிகொண்டு சுடுவது போன்ற போஸ்டர் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இயக்குநரான விஜய் மகன்: வேட்டைக்காரன் படத்தில் அப்பா விஜய்யுடன் சேர்ந்து "நான் அடிச்சா தாங்கமாட்ட" பாடலுக்கு ஜேசன் சஞ்சய் நடனமாடியிருப்பார். அப்பாவை போல இவரும் சினிமாவில் ஹீரோவாகத்தான் ஆவார் என பலரும் எதிர்பார்த்தனர். பிரேமம் பட இயக்குநரே ஜேசன் சஞ்சய் வைத்து படமெடுக்க விஜய்யிடம் பேசியது எல்லாம் குறிப்பிடத்தக்கது. ஆனால், தனது தாத்தாவை போல இயக்குநராகும் முடிவுக்கு வந்த ஜேசன் சஞ்சய் லைகா தயாரிப்பில் சந்தீப் கிஷனை வைத்து சிக்மா படத்தை எடுத்து முடித்து விட்டார்.
சிக்மா டீசர் அப்டேட்: படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றதாக சமீபத்தில், லைகா அறிவித்த நிலையில், தற்போது அதிரடியாக சிக்மா படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி படத்தை வெளியிடுவோம் என லைகா அறிவித்த நிலையில், குட் பேட் அக்லி பொங்கலுக்கு வரமுடியாமல் போனது. ஆனால், கடைசியில் பிப்ரவரி மாதம் தான் விடாமுயற்சி வெளியானது.
பொங்கலுக்கு வருமா?: ஜன நாயகன் படத்துக்குப் போட்டியாக ஏற்கனவே பிரபாஸின் தி ராஜா சாப் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ள நிலையில், விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் முதல் படமான சிக்மா படமும் பொங்கல் ரிலீஸ் என்கிற அறிவிப்புடன் நாளை டீசர் வெளியானால் ஒரே காமெடியாக இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சிக்மா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு நாளை வெளியாகிறதா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். ஜேசன் சஞ்சய் இயக்கத்தை ரசிகர்கள் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











