Jason Sanjay: அவரும் இல்ல இவரும் இல்ல... விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் இணையும் மல்லுவுட் ஹீரோ!

சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குநராக அறிமுகமாகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு கடந்தாண்டே வெளியானது. ஆனால் படத்தின் ஹீரோ யார் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் படத்தின் ஹீரோ யார் என்றும், படப்பிடிப்பு குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜேசன் சஞ்சய் உடன் இணையும் மல்லுவுட் ஹீரோ

விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு செல்ல உள்ள நிலையில், அவரது மகன் சஞ்சய் திரையுலகில் அறிமுகமாகிறார். அப்பாவின் இடத்தை நிரப்ப ஹீரோவாக வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவரோ இயக்குநர் கனவில் சமரசம் செய்துகொள்ள முடியாது என திட்டவட்டமாக இருப்பதை காண முடிகிறது. சுதா கொங்கரா, அல்போன்ஸ் புத்திரன் போன்ற இயக்குநர்கள் கேட்டும் அவர்களது படங்களில் ஹீரோவாக நடிக்க நோ சொல்லிவிட்டார்.

 Jason Sanjay: Dulquer Salmaan going to lead in Jason Sanjay Debut direction

சினிமா மேக்கிங், டைரக்‌ஷன் பற்றி லண்டனில் தனியாக கோர்ஸ் படித்துள்ள சஞ்சய், யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காமல் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதன்படி ஜேசன் சஞ்சய்யின் இயக்குநர் ஆசைக்கு லைகா நிறுவனம் க்ரீன் சிக்னல் கொடுத்து பெரிய பட்ஜெட்டையும் ஒதுக்கியுள்ளது. லைகா சுபாஸ்கரனும் விஜய்யின் மனைவி சங்கீதாவும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஜேசன் சஞ்சய்க்கு முதல் பட வாய்ப்பு எளிதாக கிடைத்துவிட்டதாக விமர்சகர்கள் கூறி வந்தனர்.

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்திற்கான அக்ரிமெண்ட் கையெழுத்தான போட்டோவுடன் கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து அடுத்த நிமிடத்தில் இருந்தே ஜேசன் சஞ்சய் படத்தின் ஹீரோ யார் என்பது தான் கோலிவுட்டில் பெரிய விவாதமே. அதன்படி முதலில் விஜய் சேதுபதி தான் ஹீரோ என சொல்லப்பட்டது. மேலும் அது கேங்ஸ்டர் ஜானர் படம் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் கவின், துருவ் விக்ரம் ஆகியோரில் ஒருவர் தான் ஜேசன் சஞ்சய் படத்தின் இயக்குநர் என சொல்லப்பட்டது. தொடர்ச்சியாக பல ஹீரோக்களின் பெயர்களும் இந்த லிஸ்ட்டில் அடிப்பட்டன. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஹீரோவாக பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பான் இந்தியா மொழிகளில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான்.

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப், சூர்யாவின் 43வது படம் என தமிழில் ஏற்கனவே இரண்டு பெரிய ப்ராஜெக்ட்களில் கமிட்டாகியுள்ளார் துல்கர். இந்த வரிசையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திலும் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X