அப்பா விஜய்யை விட அந்த ஹீரோவைத்தான் ரொம்ப பிடிக்கும்.. மீண்டுமொரு SMS-ஐ கொடுக்கப் போகிறாரா சஞ்சய்?

சென்னை: தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாகப் போகிறார் என பரபரப்பு பற்றிக் கொண்டிருந்த நிலையில், என்னோட டைரக்‌ஷன் திறமையை காட்டப் போகிறேன் அதற்காகத்தான் வெளிநாட்டில் படித்தேன் என அட்டகாசமாக முதல் படமே லைகா எனும் பெரிய நிறுவனத்தில் தொடங்கி உள்ளார்.

சஞ்சய் இயக்குநராக உருவான நிலையில், அடுத்து அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள ஒரே கேள்வி என்னவென்றால், பிரதீப் ரங்கநாதன் போல படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடிப்பாரா? அல்லது சஞ்சய் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யாரு? என்பது தான்.

Jason Sanjay going to direct Jiiva for his debut movie?

நடிகர் விஜய்சேதுபதி பெயர் ஒரு பக்கம் அடிபட்டு வரும் நிலையில், சினிமா பிரபலமான செய்யாறு பாலு இன்னொரு பிரபல நடிகரைத்தான் சஞ்சய் இயக்கப் போகிறார் என்பதை சொல்லியிருக்கிறார்.

இயக்குநரான விஜய் மகன்: நடிகர் ரஜினிகாந்துக்கு மகன் இல்லாத நிலையில், அவரது மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் இருவருமே இயக்குநர்களாக கலக்கினர். ஆனால், நடிகர் விஜய்க்கு மகன் இருந்தாலும், அவரும் ஹீரோவாகாமல் இயக்குநராகவே தமிழ் சினிமாவில் அறிமுகமாகப் போவது தான் யாருமே எதிர்பார்க்காத செம ட்விஸ்ட்டாக தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.

Jason Sanjay going to direct Jiiva for his debut movie?

ஜீவாவை இயக்கப் போகிறாரா சஞ்சய்?: நண்பன் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த ஜீவா ஜில்லா படத்தின் ஓபனிங் பாடலுக்கும் வந்து ஆட்டம் போட்டிருப்பார். குடும்ப நண்பராகவே இருந்து வரும் ஜீவா நடிப்பில் வெளியான SMS உள்ளிட்ட படங்கள் சஞ்சய்க்கு ரொம்பவே ஃபேவரைட்டான படங்கள் என்கின்றனர்.

லைகா தயாரிப்பில் சஞ்சய் இயக்கப் போகும் முதல் படத்தில் நடிகர் ஜீவா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

Jason Sanjay going to direct Jiiva for his debut movie?

சிவா மனசுல சக்தி: இயக்குநர் ராஜேஷ். எம் இயக்கத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் ஜீவாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுத் தந்தது. கோ, கற்றது தமிழ் உள்ளிட்ட படங்களிலும் மாஸ் காட்டி வந்த ஜீவா சமீப காலமாக சொதப்பி வருகிறார்.

அப்பா விஜய்யை விட சினிமாவில் ஹீரோவாக ஜேசன் சஞ்சய்க்கு ஜீவாவைத் தான் ரொம்ப பிடிக்குமாம். அதனால், அவருக்கு ஒரு சூப்பரான கம்பேக் கொடுப்பாரா? என்பதை வெயிட் பண்ணி பார்க்க வேண்டும் என செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார். சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரமை சஞ்சய் இயக்கினாலும் சிறப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X