Jason Sanjay: அப்பாவுக்குப் போட்டியாக ஜேசன் சஞ்சய்... பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் அப்டேட்ஸ்
சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குநராக அறிமுகமாகிறார். இவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது, விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ள இந்தப் படத்தில் ஹீரோ யார் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில், ஜேசன் சஞ்சய் படத்தில் இணையும் நடிகர்கள், நடிகைகள் உட்பட அனைத்து அப்டேட்களும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாம்.
ஷூட்டிங் ரெடியான ஜேசன் சஞ்சய்
விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புத்தாண்டு ஸ்பெஷலாக தளபதி 68 டைட்டிலை படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலில் தளபதி 68 உருவாகி வருகிறது. இந்நிலையில், தனது அப்பாவுக்குப் போட்டியாக அப்டேட் கொடுக்க ரெடியாகிவிட்டராம் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.

அப்பா வழியில் ஹீரோவாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேசன், லண்டனில் சினிமா மேக்கிங் குறித்து படித்துள்ளார். இதனால் இயக்குநர் கனவில் இருந்து விலகாத ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காத ஜேசன் சஞ்சய், முதல் படத்திலேயே பிரம்மாண்டமான கூட்டணியுடன் களமிறங்கவுள்ளாராம். இதுவரை ஜேசன் சஞ்சய் - லைகா புரொடக்ஷன் மட்டுமே இக்கூட்டணியில் இணைந்துள்ளது.
இந்தப் படத்தின் ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், மற்ற நடிகர்கள் குறித்த எதுவும் இதுவரை அறிவிக்கவில்லை. இதுநாள் வரை ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருந்த ஜேசன் சஞ்சய், இப்போது படப்பிடிப்புக்கு செல்ல ரெடியாகிவிட்டார். இதனால் இந்தப் படத்தில் இணைந்துள்ள முழு கூட்டணி குறித்து அறிவிக்க லைகா நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம்.
அதன்படி ஜேசன் சஞ்சய் - லைகா கூட்டணியில் உருவாகும் படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட்ஸ் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு விஜய்யின் தளபதி 68 டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியானது. இந்த ஹைப்பில் இருந்து இன்னும் ரசிகர்கள் வெளிவராத நிலையில், ஜேசன் சஞ்சய் படத்தின் அறிவிப்புகளும் பொங்கலுக்கு வெளியாகின்றன.
இதனிடையே ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில், விஜய் சேதுபதி அல்லது துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், கடைசியாக வெளியான தகவல்களின் படி, கவின் தான் ஹீரோ என சொல்லப்பட்டது. இப்போது அதிலும் மாற்றம் நடந்துள்ளதா அல்லது துருவ் விக்ரம், கவின் இருவரில் ஒருவர் தான் ஹீரோவா என தெரிய வரவுள்ளது.
இந்தப் படம் பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 10 மொழிகளில் இந்தப் படத்தை இயக்க சஞ்சய் முடிவு செய்துள்ளாராம். சஞ்சய்யின் முதல் படம் 10 மொழிகளிலும் வெளியானால், அது அவரது கேரியருக்கு நல்ல அடித்தளமாக அமையும் என லைகா ரிஸ்க் எடுக்க முடிவு செய்துள்ளதாம். இன்னொரு பக்கம் விஜய் இதுவரை ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











