Jason Sanjay: ஜேசன் சஞ்சய் முதல் படமே பான் இந்தியா ரிலீஸ்... பட்ஜெட்டை வாரி இறைக்கும் லைகா..?

சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.

சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தப் படத்தை பான் இந்தியா ஜானரில் 10 மொழிகளில் இயக்க முடிவு செய்துள்ளாராம் சஞ்சய்.

 Jason Sanjay: Jason Sanjay Planned his debut film on Pan India Release

பான் இந்தியா இயக்குநராகும் ஜேசன் சஞ்சய் : கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய், லியோ படத்தில் நடித்துவிட்டு தற்போது தளபதி 68ல் கவனம் செலுத்தி வருகிறார். லியோ அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் மகன் இயக்குநராக தனது முதல் படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், அப்பாவை போல ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரோ வெளிநாட்டில் சினிமா மேக்கிங் பற்றி படித்துவிட்டு தற்போது இயக்குநராகிவிட்டார். அதன்படி, ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காத சஞ்சய், முதல் படத்திலேயே பிரம்மாண்டமான கூட்டணியில் இணைந்துள்ளார். லைகா தலைவர் சுபாஸ்கரன் முன்னிலையில் ஜேசன் சஞ்சய் கையெழுத்திட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இதில் விஜய் சேதுபதி அல்லது துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், கடைசியாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கவின் தான் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படம் பான் இந்தியா ஜானரில் ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 10 மொழிகளில் இந்தப் படத்தை இயக்கவுள்ளாராம் சஞ்சய். சூர்யாவின் கங்குவா 10 மொழிகளில் உருவாகும் நிலையில், அதனைத் தொடர்ந்து சஞ்சய் இயக்கும் படமும் 10 மொழிகளில் உருவாகும் என சொல்லப்படுகிறது.

சஞ்சய்யின் முதல் படம் அனைத்து மொழிகளிலும் வெளியானால், அது அவரது கேரியரில் சிறப்பான சம்பவமாக இருக்கும் என லைகா நிறுவனமும் ஓக்கே சொல்லிவிட்டதாம். ஆனாலும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதுபற்றிய அப்டேட்டையும் மினி டீசர் வடிவில் விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதன் மூலம் முதல் படத்திலேயே தரமான என்ட்ரி கொடுக்க ரெடியாகிவிட்டார் ஜேசன் சஞ்சய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X