அப்பா பார்த்த வேலை.. கார்ல என்னை கடத்த பார்த்தாங்க.. ஜேசன் சஞ்சய் சொல்றதை கேளுங்க!
சென்னை: தளபதி விஜய் போலவே குழந்தைகளை ஈஸியாக ஜேசன் சஞ்சய் கவர் செய்துவிடுவார் என்பது அவரது பேச்சை பார்த்தாலே தெரிகிறது. சிறு வயதில் ஸ்கூல்ல இருந்து வரும் போது என்னை கடத்தப் பார்த்தாங்க என்றும் அதற்கு காரணமே அப்பா விஜய் தான் என்று பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
முதலமைச்சராக விஜய் மாறியுள்ள நிலையிலும், இன்னமும் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அப்பா விஜய்யை சந்தித்தது போன்ற எந்தவொரு புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகவில்லை.

இந்த மாதம் இறுதியில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள சிக்மா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ஜேசன் சஞ்சய் சிறு வயதில் அப்பாவால் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை நடிகர் ஜெமினி மணியின் மகனிடம் செம க்யூட்டாக செல்லும் வீடியோ வைரலாகி உள்ளது.
குழந்தைகள்னா ரொம்ப இஷ்டம்: அப்பா விஜய்யை போலவே மகன் ஜேசன் சஞ்சய்க்கும் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் என்பது அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தாலே தெரிகிறது. தொடர்ந்து குழந்தைகளை கொஞ்சுவது, குழந்தை நட்சத்திரங்களுடன் ஜாலியாக பேசி மகிழ்வது என அசத்தி வருகிறார். இயக்குநராக அல்லாமல், ஹீரோவாக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகி இருந்தால் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் அவர் ஃபேவரைட் ஆகிவிடுவார் என்று கூறுகின்றனர்.
கடத்த பார்த்தாங்க: நடிகர் ஜெமினி மணியின் மகனிடம் பேசிக் கொண்டிருந்த ஜேசன் சஞ்சய், சிறு வயதில் உங்க அப்பா என்னை கார்ல கடத்தப் பார்த்தாரு. எப்போதுமே எங்க அப்பா செக்யூரிட்டியை அனுப்பி ஸ்கூல்ல இருந்து என்னைக் கூட்டிட்டுப் போவாங்க. ஆனால், உன்னோட அப்பா என்னை வந்து கடத்திட்டுப் போறது போல தூக்கிச் சென்றார் என்று ஜேசன் சஞ்சய் சொல்ல, அதற்கு ஜெமினி மணி நான் தீவிர தளபதி ஃபேன், எப்படியாவது தளபதியை பார்க்கணும்னு செக்யூரிட்டிக்கு பதிலாக நான் சென்று சஞ்சயை தூக்கிவிட்டேன். அவர் ஸ்கூல் பேக் எல்லாம் வீசிவிட்டு அப்படி எட்டி உதைத்து தப்பிக்க பார்த்தார் என்று ஜெமினி மணி கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோவில் கூட அப்பா விஜய் பற்றி ஜெமினி மணி தான் பேசுகிறாரே தவிர ஜேசன் சஞ்சய் லாவகமாக அதை தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாவை சந்திப்பாரா?: விஜய் - சங்கீதா இடையே விவாகரத்து பிரச்னை வெடித்துள்ள நிலையில், ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். விரைவில் அப்பா விஜய்யை ஜேசன் சஞ்சய் சந்திப்பாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த வீடியோவை தளபதி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து ஜேசன் சஞ்சய்யை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications