இனிஷியலுக்கு கூட அப்பா வேண்டாம்.. விஜய் மகன் ஜேசன் அதிரடியாக செஞ்சிட்டாரு.. இயக்கும் படத்தில் இப்படியா?

சென்னை: விஜய் - சங்கீதா - திரிஷா விவகாரம்தான் கோலிவுட்டில் விவாதமாகியிருக்கிறது. கடந்த மாத இறுதியிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று அந்த விஷயத்தில் நடந்துகொண்டே இருக்கிறது. விஜய் இந்தப் பிரச்னை வொர்த் இல்லை என்று சொன்னாலும்; இப்பிரச்னையால் அவரது இமேஜ் பயங்கரமாக டேமேஜ் ஆகிவிட்டது என்றே தெரிகிறது. இந்நிலையில் விஜய் மீது இருக்கும் கோபத்தில் தான் இயக்கும் படத்தில் ஜேசன் சஞ்சய் செய்திருக்கும் செயல் ஒன்று அனைவரிடமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

விஜய்க்கு தமிழ்நாட்டில் பெண்கள் மத்தியில் நல்ல இமேஜ் இருந்தது. அவரும் அதனை தக்க வைக்கும் விதமாக தனது படங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்தெல்லாம் பாடம் எடுப்பார். ஆனால் அந்த இமேஜை உடைக்கும் விதமாக அமைந்துவிட்டது அவர் மனைவி சங்கீதா தொடுத்திருக்கும் விவாகரத்து வழக்கும்; விஜய்யின் செயல்பாடும். சங்கீதா தாக்கல் செய்திருக்கும் மனுவில் விஜய் பற்றி எக்கச்சக்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அதனையடுத்து தளபதியோ எதை பற்றியும் கவலைப்படாமல் திரிஷாவுடன் ஜோடி போட்டு ஒரு திருமணத்துக்கு வந்தார்.

Jason Sanjay Uses S Initial in Sigma Poster Amid Vijay Sangeetha Trisha Controversy
Photo Credit:

இரண்டாவது மனுத்தாக்கல்: அவர் அப்படி செய்தது கடும் கண்டனங்களை சந்தித்தது. மேலும் தன்னை வீட்டுக்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார்; எனவே அவர் அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும் என சங்கீதா இன்னொரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இப்படி மனைவி ஏகப்பட்ட வருத்தத்தில் இருக்க; விஜய்யோ தன் கட்சி மகளிர் அணி கூட்டத்தில் பேசியபோது, 'நீங்கள் ஃபீல் செய்யாதீர்கள். அந்த அளவுக்கு அது வொர்த் கிடையாது' என அலட்சியமாக பேசி மேலும் விமர்சனங்களை சந்தித்துவிட்டார்.

Also Read
பிரியங்கா மோகனுக்கும் டார்ச்சர்?.. விஜய் மேனேஜர் ஜெகதீஷ் பற்றி தவெகவில் இருந்தவரே இப்படி சொல்றாரே
பிரியங்கா மோகனுக்கும் டார்ச்சர்?.. விஜய் மேனேஜர் ஜெகதீஷ் பற்றி தவெகவில் இருந்தவரே இப்படி சொல்றாரே

பிள்ளைகளின் மன நிலைமை: இந்த விஷயத்தில் பலரும் விஜய்யின் மகன், மகள் மனநிலைமை குறித்தும் பேசுகிறார்கள். சங்கீதாவுக்கும், விஜய்க்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பே பிரச்னை உருவாகி பிரிந்திருக்கிறார்கள் என்பது; விவாகரத்து மனுவை பார்க்கையில் தெரிகிறது. பொதுவாக கணவன், மனைவிக்குள் பிரச்னை வந்து விவாகரத்து ஏற்பட்டால்; யாருமே தன் பிள்ளைகளை விட்டுக்கொடுக்க மறுப்பார்கள். ஆனால் விஜய் அப்படி இல்லை; தனது பிள்ளைகளையுமே ஒதுக்கி வைத்துவிட்டார் என்று ஒருதரப்பினர் கூறுகிறார்கள்.

Jason Sanjay Uses S Initial in Sigma Poster Amid Vijay Sangeetha Trisha Controversy
Photo Credit:

அப்படித்தான் செயல்பாடும் இருக்கிறது: அதற்கேற்றபடிதான் விஜய்யின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. மகன் படம் இயக்கும்போது அதுதொடர்பாக ஒரு வாழ்த்து தெரிவித்து இரண்டு வரிகளில்கூட ட்வீட் போடவில்லை. மகள் சாஷா லண்டனில் படித்துவிட்டு பட்டம் பெற்றபோது ஒரு தந்தையாக அங்கே விஜய் இல்லை. அவருக்கு பதிலாக தந்தை ஸ்தானத்தில் அண்ணன் ஜேசன் சஞ்சய்தான் இருந்தார். இப்படி பிள்ளைகளின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டத்தில்கூட அருகில் இல்லாமல்; இவர் நாட்டை திருத்த வந்துவிட்டார் என்று விளாச தொடங்கியிருக்கிறார்கள் சோஷியல் மீடியாவில்.

ஜேசன் சஞ்சய் செய்தது: இந்நிலையில் ஜேசன் சஞ்சய்யின் செயல் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது அவர் சிக்மா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதன் இறுதிக்கட்ட வேலைகளில் இப்போது இருக்கிறார். அந்தப் படத்தின் போஸ்டரில் இயக்குநர் என்ற இடத்தில் ஜேசன் சஞ்சய் S என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். S என்பது சங்கீதாவை குறிப்பதாகும். எனில் இனிஷியலுக்கு கூட தன் தந்தை இருக்கக்கூடாது என முடிவு செய்து ஜோசப் விஜய் பெயரின் முதல் எழுத்தான J அல்லது Vயை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறார் என தெரிகிறது.

ஜேசன் இதை அப்போதே செய்திருக்கிறார். எப்படியோ ரசிகர்களின் கவனத்தில் அது வராமல் போனாலும்; இப்போது அதை பிடித்துவிட்டார்கள். எவ்வளவு மன வலி இருந்திருந்தால் இனிஷியலுக்கு கூட விஜய்யின் பெயரை பயன்படுத்தாமல் தவிர்த்திருப்பார். உண்மையில் ஜேசன் பாவம்தான் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X