Jason Sanjay: “அப்பா பக்கம் போகாத மகன்..” ஜேசன் சஞ்சய்யின் முதல் ஹீரோ இவர் தானா..?
சென்னை: கோலிவுட் டாப் ஹீரோ விஜய் தற்போது லியோ படத்தை முடித்துவிட்டு தளபதி 68ல் நடிக்க ரெடியாகிவிட்டார். அதேநேரம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக்க சில முன்னணி இயக்குநர்கள் முயற்சி செய்தனர்.
ஆனால், அவரோ லைகா பேனரில் தனது முதல் படத்தை இயக்க ரெடியாகிவிட்டார். ஜேசன் சஞ்சய் - லைகா கூட்டணி உறுதியானதை தொடர்ந்து, இந்தப் படத்தின் ஹீரோ குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜேசன் சஞ்சய்யின் முதல் ஹீரோ: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய்க்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனிடையே விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் ஹீரோவாக நடிப்பார் என ரசிகர்கள் காத்திருந்தனர். அவரை இயக்க சில முன்னணி இயக்குநர்கள் கதையுடன் வெயிட்டிங்கில் இருந்தனர்.
ஆனால், ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா மேக்கிங் குறித்து படித்துவிட்டு இயக்குநராகும் முடிவில் இருப்பதாக சொல்லப்பட்டது. மேலும் சில ஷார்ட் ஃபிலிம்களை டைரக்ட் செய்த சஞ்சய், திரைப்படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் திடீரென அவர் இயக்குநராகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிலும் ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காத சஞ்சய், இதுவரை ஷார்ட் ஃபிலிம்ஸ் மட்டுமே இயக்கியுள்ளார். இருந்தாலும் அவர் சொன்ன கதை சுவாரஸ்யமாக இருந்ததால், லைகா நிறுவனம் துணிந்து சஞ்சய்யின் படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்டதாம்.

லைகா தலைவர் சுபாஸ்கரன் முன்னிலையில் ஜேசன் சஞ்சய் கையெழுத்திட்ட போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்யின் லியோ அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஜேசன் சஞ்சய்யின் முதல் படம் குறித்த அபிஸியல் அப்டேட் செம்ம சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ஹீரோ யார் என்பது தான் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது அதுகுறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. வீட்டிலேயே அப்பா விஜய் ஒரு ஹீரோவாக இருக்கும் போது, ஜேசன் சஞ்சய் விஜய் சேதுபதி பக்கம் சென்றுள்ளதும் அதிக கவனம் ஈர்த்துள்ளது.
இருப்பினும் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ, ஹீரோயின் மற்ற நடிகர்கள், இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இவையனைத்தும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











