Jason Sanjay: அப்பா விஜய் ஸ்டைலில் செம்ம மாஸ் காட்டும் ஜேசன் சஞ்சய்.. ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் போட்டோ
சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குநராகிறார். விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளார். அதேநேரத்தில் விஜய்யின் மகன் திரையுலகில் அடியெடுத்து வைப்பது அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் அப்பா விஜய் ஸ்டைலில் சஞ்சய் மாஸ் காட்டும் போட்டோ வைரலாகி வருகிறது.
விஜய் ஸ்டைலில் மாஸ் காட்டும் சஞ்சய்
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஹீரோ விஜய். ஆரம்பத்தில் பல தோல்விப் படங்களில் நடித்தாலும், தனது அனுபவத்தால் கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வளர்ந்து காட்டினார். கோலிவுட்டில் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சக்கரவர்த்தி என்றால் அது விஜய் தான் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தளவிற்கு உச்சத்தில் இருக்கும் விஜய், சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார்.

அரசியல் தான் தனது வேட்கை என தீர்மானித்துள்ள விஜய், இனிமேல் படங்களில் நடிக்கப் போவதில்லை என அறிவித்துவிட்டார். இதனால் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தைத் தொடர்ந்து தளபதி 69-ல் மட்டும் நடிக்கவுள்ளார். அதேநேரம் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடன் 'நான் அடிச்சா தாங்கமாட்ட.." என கெத்தாக ஆட்டம் போட்டவர் சஞ்சய்.
அவரும் விஜய் வரிசையில் ஹீரோவாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். டைரக்ஷன், சினிமா மேக்கிங் குறித்து வெளிநாடுகளில் புரோபஷனல் கோர்ஸ் படித்துள்ள சஞ்சய், லைகா பேனரில் படம் இயக்கவுள்ளார். இதுபற்றிய அப்டேட் கடந்தாண்டே வெளியாகிவிட்டது. ஆனால் இதுவரை ஷூட்டிங் தொடங்கவில்லை. ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தில் யார் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்பது குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை.
விஜய் சேதுபதியில் தொடங்கி, கவின், துருவ் விக்ரம் என இவர்களில் ஒருவர் ஹீரோவாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகவுள்ள சஞ்சய், விரைவில் தனது படத்தின் ஹீரோ, டெக்னீஷியன்ஸ் பற்றி அறிவிக்கவுள்ளாராம். இந்நிலையில், ஜேசன் சஞ்சய்யின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் கறுப்பு நிற சட்டை அணிந்தபடி கை கட்டிக் கொண்டு நிற்கிறார் சஞ்சய். அவரது பின்னணியில் சிலர் வெள்ளை சட்டை அணிந்தபடி வலம் வருவது தெரிகிறது. அதனால் இந்த புகைப்படம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அலுவலகத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆனாலும் அதுபற்றி எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











