Jason Sanjay: இளம் வயதில் இயக்குநர்... விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படிப்பு என்ன தெரியுமா?
சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜேசன் சஞ்சய் இயக்குநராகும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் நேரடியாக படம் இயக்கவுள்ளார் ஜேசன் சஞ்சய். இந்நிலையில், அவரது கல்வித் தகுதி, பயோ உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜேசன் சஞ்சய் பயோ: தமிழில் தற்போது மாஸ் ஹீரோவாக கலக்கி வருபவர் விஜய். இவரது படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைப்பதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் தரமான ஓபனிங் இருக்கிறது. விஜய் நடித்துள்ள லியோ திரைப்படமும் மிகப் பெரிய ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளது கோலிவுட்டை பரபரபாக்கியுள்ளது. யாரிடமும் உதவியாளராக வேலை பார்க்காமல், 23 வயதில் இயக்குநராவது குறிப்பிடத்தக்கது.
விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என சில முன்னணி இயக்குநர்கள் லைனில் காத்திருந்தனர். ஆனால், அவரோ விஜய் போல ஹீரோவாக முடியாது எனக் கூறிவிட்டு, தாத்தா எஸ்.ஏ சந்திரசேகர் ரூட்டில் இயக்குநராக மாறிவிட்டார். வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் ஆட்டம் போட்டிருந்த சஞ்சய், எதிர்காலத்தில் ஹீரோவாக நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா மேக்கிங் குறித்து படித்துவிட்டு இயக்குநராகிவிட்டார்.
2000ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்த ஜேசன் சஞ்சய், சில்வர் ஸ்பூன் பேபியாக தான் வளர்ந்தார். சென்னையில் வளர்ந்த சஞ்சய், அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் தான் படித்துள்ளார். சின்ன வயதில் இருந்தே திரைப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டிய சஞ்சய், உலக சினிமாக்களை விரும்பி பார்ப்பாராம். அதனால், நடிப்பை விட டைரக்ஷன் பக்கமே தனது கவனத்தை செலுத்தியுள்ளார். இதன் காரணமாகவே அல்போன்ஸ் புத்ரன், சுதா கொங்கரா போன்ற இயக்குநர்கள் கேட்டும், அவர்களின் படத்தில் நடிக்க ஓக்கே சொல்லவில்லையாம்.

பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்த ஜேசன் சஞ்சய், கனடாவில் கல்லூரி படித்துள்ளார். கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா மேக்கிங் முடித்ததும், லண்டனில் திரைக்கதை எழுதுவதற்கான சிறப்பு பயிற்சியை எடுத்துள்ளார். அதன்பின்னரே ஷார்ட் ஃபிலிம்ஸ் இயக்கியுள்ளார் சஞ்சய். சினிமா மேக்கிங்கில் ஆர்வம் இருந்தாலும், சஞ்சய் மிகச் சிறந்த பேஸ்கட் பால் பிளேயர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இசை கேட்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகமாம்.
அப்பா விஜய்யை போல கார்களின் மீதும் அதிக மோகம் கொண்ட சஞ்சய், மினி கூப்பர், ஃபோர்டு முஸ்டாங் கார்களை பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக சஞ்சய்யும் விஜய் மாதிரி ரொம்பவே சைலண்டாக இருப்பதை தான் விரும்புவாராம். இந்நிலையில், லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. அதேநேரம் விஜய் - சஞ்சய் கூட்டணியில் படம் உருவாகுமா எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











