ஒரு முடிவு.. ஒரு தொடக்கம்.. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?.. பணத்துமேல!

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சந்தீபி கிஷன் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்குடன் செம மாஸாக வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவார் என எதிர்பார்த்த தளபதி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக அப்பா போல நடிகர் எல்லாம் கிடையாதுங்க, தாத்தா போல இயக்குநராக அறிமுகமாகிறேன் என சினிமா களத்தில் குதித்துள்ளார்.

Jason Sanjay s first movie titled Sigma first look out now
Photo Credit:

நடிகர் விஜய் சினிமாவுக்கு மொத்தமாக ஜன நாயகன் படத்துடன் டாட்டா காட்டவுள்ள நிலையில், ஒரு முடிவு.. ஒரு தொடக்கம் என ரசிகர்கள் ஜேசன் சஞ்சயின் வருகையை கொண்டாடி வருகின்றனர்.

ஜேசன் சஞ்சய் படத்தின் டைட்டில்: லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்திற்கு 'சிக்மா' (Sigma) என டைட்டில் வைத்துள்ளனர். Sigma என்றால் தனித்துவம் என்றும் ஒரு கூட்டத்துக்குள் பொருந்தாம தனித்து இயங்குபவரை குறிக்கும் பெயராக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான இந்தியன் 2, விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்மா திரைப்படம் லைகா நிறுவனத்துக்கு லாபகரமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் மகன்: எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் விஜய் என்கிற நிலைமையில் இருந்து தளபதி விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி என சொல்லப்படும் அளவுக்கு தமிழ்நாட்டில் தனக்கான மாஸை உருவாக்கியவர் விஜய். விஜய் மகன் ஜேசன் சஞ்சய் என தற்போது அறியப்படும் ஜேசன் சஞ்சய் கூடிய சீக்கிரமே சிறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய் என மாறி அதன் பின்னர் ஜேசன் சஞ்சயின் அப்பா தான் விஜய் என அடுத்து வரும் தலைமுறை அறியும் அளவுக்கு உயர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பணத்தின் மேலே: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். ஏற்கனவே பணத்தை எரிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது பணக்கட்டுகளின் மேல் பந்தாவாக சந்தீப் கிஷன் அமர்ந்திருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக்கை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி நடித்த ஃபர்ஸி படம் போல கள்ள நோட்டு அடிக்கும் கதையா? அல்லது வங்கியில் பணத்தை திருடும் கதையாக சிக்மா உருவாகி உள்ளதா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அடுத்த ஆண்டு சிக்மா திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X