Atlee Apartment: மீர் பிறந்த அதிர்ஷடம்.. 38 கோடிக்கு புது வீடு வாங்கிய அட்லீ.. எங்கே தெரியுமா?
மும்பை: ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வரும் அட்லீ 38 கோடி ரூபாய்க்கு புதிதாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்னிந்திய பிரபலங்கள் சமீப காலமாக பாலிவுட்டில் மிகப்பெரிய இடத்தை பிடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் பாலிவுட் பக்கம் போனால் பிழைக்க விட மாட்டார்கள் என்கிற கருத்தை எல்லாம் தவிடு பொடியாக்கி தென்னிந்திய பிரபலங்களின் ஆற்றலை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களே மதிக்கத் தொடங்கி உள்ளனர்.

ஷாருக்கானின் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்த நிலையில், அந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாராவையும் வில்லனாக விஜய்சேதுபதியையும் வைத்து ஜவான் படத்தை ஜம்முன்னு இயக்கி வருகிறார்.
ஷங்கரின் சிஷ்யன்: இயக்குநர் ஷங்கரின் சிஷ்யனாக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். அதன் பின்னர் விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களில் அவருடன் பணியாற்றினார்.
இயக்குநர் ஷங்கரே பாலிவுட்டில் இதுவரை டாப் ஹீரோக்களை இயக்காத நிலையில், அவரது சிஷ்யன் அட்லீ ஷாருக்கானையே இயக்கும் நிலைக்கு தன்னை அப்கிரேட் செய்துள்ளார்.
மீர் பிறந்த அதிர்ஷ்டம்: அட்லீ மற்றும் பிரியா அட்லீ தம்பதியினருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பிறக்காமல் இருந்த நிலையில், சமீபத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு ஷாருக்கானின் தந்தை பெயரான மீர் என்கிற பெயரை அட்லீ சூட்டி உள்ளார்.

இந்நிலையில், மீர் பிறந்த அதிர்ஷ்டம் இயக்குநர் அட்லீ பல கோடி ரூபாய்க்கு பெரிய சொகுசு அப்பார்ட்மென்ட் ஒன்றை வாங்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பையில் வீடு: நடிகர் சூர்யா சமீபத்தில் தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் சுமார் 70 கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கி குடிபுகுந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இயக்குநர் அட்லீ 38 கோடி ரூபாய்க்கு மும்பை மாநகரில் சொகுசு அப்பார்ட்மென்ட் ஒன்றை வாங்கி உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அடுத்தும் பாலிவுட் படம்: இயக்குநர் அட்லீ ஜவான் படத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், ஜவான் முடிந்த உடனே விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில பல காரணங்களுக்காக அந்த வாய்ப்பு மிஸ் அக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மீண்டும் பாலிவுட் நடிகர் ஒருவர் படத்தை அட்லீ இயக்கப் போகிறார் என்கிற பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன.

அதற்காகத்தான் தற்போது மும்பையிலேயே 38 கோடி ரூபாய்க்கு பிரபலங்கள் இருக்கும் ஏரியாவில் புதிய வீடு ஒன்றை இயக்குநர் அட்லீ வாங்கி உள்ளார் என்கின்றனர். ஆனால், மும்பையில் வீடு வாங்கியது குறித்து இயக்குநர் அட்லீ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











