விஜய் சேதுபதிக்கு அதிக காட்சிகளை கொடுங்கள்.. ஷாருக்கான் பற்றி மனம் திறந்த எடிட்டர் ரூபன்
டெல்லி: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒருவருடம் நிறைவடையும் சூழலில் ஷாருக் பற்றி படத்தின் எடிட்டர் ரூபன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருந்ததால் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் பதான் படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் சாதனை படைத்தது.பதான் படத்தின் மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான்.

முதல் படம்: அட்லீக்கு அது முதல் ஹிந்தி படம் என்பதால் எப்படிப்பட்ட வசூலை எடுத்து விமர்சனத்தை சந்திக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது. படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான், அட்லீ ஆகிய இருவருமே ஹேப்பியில் இருக்கின்றனர்.
அடுத்த படமும் அட்லீ: ஜவான் படத்தில் அட்லீயின் வொர்க்கிங் ஸ்டைல் ஷாருக்கிற்கு ரொம்பவே பிடித்துவிட்டதாக தெரிகிறது. நிச்சயம் அவருடன் இன்னொரு படம் செய்ய வேண்டும் என்ற மூடில் ஷாருக்கான் இருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்று பாலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றனர். மேலும் அந்தப் படத்துக்கும் ஜவான் டீமையே இறக்கலாம் என்ற ஐடியாவிலும் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
ரூபன் பேட்டி: ஜவான் திரைப்படம் வெளியாகி இன்றுடம் 1 வருடம் நிறைவடைகிறது. இந்நிலையில் ஷாருக்கான் பற்றி ஜவான் படத்தின் எடிட்டர் ரூபன் ஒரு பேட்டியில் பேசுகையில், "ஜவான் படத்தின் தயாரிப்பாளர் ஷாருக்கான் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் நினைத்திருந்தால் படத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்திருக்கலாம். ஆனால் அவரோ எனது சம்பந்தப்பட்ட காட்சிகளை கொஞ்சம் கட் செய்துவிடுங்கள் என்று சொன்னார்.
வில்லனுக்கு கொடுங்கள்: அதுமட்டுமின்றி பிற நடிகர்கள், நடிகைகள், வில்லனுக்கு கூடுதல் காட்சிகள் கொடுங்கள் என்றார். முக்கியமாக வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு அதிக காட்சிகள் கிடைக்க வேண்டும் விரும்பியதே ஷாருக்கான்தான். அந்த குணம் பொதுவாக ஒரு இயக்குநரிடம் இருக்கும் குணம். தான் படம் இயக்கப்போகிறேன் என்று ஷாருக்கான் அதிகாரப்பூவமாக அறிவிக்கும் நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர் ஒரு நல்ல கலைஞர் மட்டுமில்லை நல்ல மனிதரும்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











