பெரிய நடிகர்களுக்கு என் கூட நடிக்க பயம்.. பிரியாமணி பேச்சை கேட்டு கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை: இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பிரியாமணி. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில், பெரிய ஹீரோக்களுடன் நடிக்காததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
நடிகை பிரியாமணி இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் பிரியாமணியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்து பாராட்டை பெற்றார். நடிகை பிரியாமணியின் சிறப்பான நடிப்பை பாராட்டி அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா ஆகிய படங்களில் பிசியாக நடித்து வந்தார்.

நடிகை பிரியாமணி: சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே, முஸ்தபா என்பவரை திருமணம் செய்துகொண்ட பிரியாமணி, திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து அமேசான் பிரைமில் வெளியான ஃபேமிலி மேன் முதல் பாகம் , ஃபேமிலி மேன் இரண்டாம் பாகத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த இரண்டு தொடருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஜவான் படத்தில்: இதையடுத்து, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்த ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மொழியில் செப்டம்பர் மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. ஜவான் படத்தை தொடர்ந்து, அஜய் தேவ்கன் நடித்த மைதான் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்போ இதுதான் டிரண்ட்: மைதான் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியாமணி, பாலிவுட்டில் உள்ள சில நடிகைகள், தாங்கள் செல்லும் இடங்கள் பற்றி முன்கூட்டியே ஏஜன்சிகளிடம் சொல்லி விடுவார்கள். அவர்கள் சொன்ன தகவல்படி அந்த ஏஜன்சியின் புகைப்பட கலைஞர்கள், அவர்களை போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஏதேச்சையாக அங்கு அவர்கள் சென்றது போல, 'ஸ்பாட்டட்' என பதிவிட்டு விடுவார்கள். இது அங்கு இப்போது ஒரு டிரண்ட் ஆகவே மாறிவிட்டது என்றார்.
இதெல்லாம் ஓவர்: தொடர்ந்து பேசிய அவர், பெரிய ஹீரோக்கள் என்னை பார்த்து பயப்படுகிறார்கள், நடிப்பில் நான் அவர்களை தூக்கி சாப்பிட்டுவிடுவேன் என்பதால், பெரிய நடிகர்களின் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வரவில்லை என்றார். இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்ஸ், நீங்கள் சிறந்த நடிகை தான் அதற்காக, பெரிய நடிகர்கள் பயப்படுகிறார்கள் என்று சொல்லுவது எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











