Jawan: ஒரு பாடலில் மொத்தமாக சொதப்பிய அட்லீ... மீண்டும் ஜவான் ஷூட்டிங் ஸ்பாட் வந்த ஷாருக்கான்

மும்பை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.

ஜவான் ப்ரிவியூ வீடியோ இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் ஷாருக்கானுக்கு திருப்தி இல்லையாம்.

 Jawan: Atlee is re-shooting only one song in Jawan Film

அதனால், அந்தப் பாடலை மீண்டும் எடுக்க வேண்டும் என அட்லீக்கு ஆர்டர் போட்டுள்ளார் ஷாருக்கான்.

மீண்டும் ஜவான் ஷூட்டிங் ஸ்பாட் வந்த ஷாருக்கான்:ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியான பதான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்திருந்தது. பான் இந்தியா படமாக வெளியான பதான், 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் ஷாருக்கானின் ஜவான் படம் மீதும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான், செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.

ஷாருக்கானின் ரெட் சில்லர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜவான் படத்தில், ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியா மணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜவான் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்ட அட்லீ, ப்ரிவியூ வீடியோவை வெளியிட்டு மாஸ் காட்டினார்.

ஷாருக்கானின் ஆக்‌ஷன் ட்ரீட்டாக வெளியான இந்த ப்ரிவியூ வீடியோ, ஜவான் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான இந்த வீடியோ, 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. ஜவான் ட்ரெய்லரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், தமிழ் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், பா ரஞ்சித் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர்.

ஜவான் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதால் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தீவிரமாக பார்த்து வருகிறார் அட்லீ. அதனால், விரைவில் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிள் உட்பட மற்ற அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், ஜவான் படத்தில் கடைசி நேரத்தில் ஒரு பஞ்சாயத்து வந்துள்ளதாம். ஷாருக்கான், தீபிகா இருவருக்கும் பிரம்மாண்டமான பாடல் ஒன்று இப்படத்தில் உள்ளது.

 Jawan: Atlee is re-shooting only one song in Jawan Film

அந்தப் பாடலுக்கு பாலிவுட்டின் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் ஃபராஹ்கான் கோரியோகிராபி செய்திருந்தாராம். ஆனால், பாடல் எடிட்டிங் முடிந்ததும் அதனை பார்த்த ஷாருக்கானுக்கு சுத்தமாக திருப்தி இல்லையாம். அதனால் டென்ஷனான ஷாருக்கான், அந்தப் பாடலை மட்டும் மீண்டும் எடுக்க வேண்டும் என அட்லீக்கு ஆர்டர் போட்டுள்ளார். இதனையடுத்து ஷாருக்கான், தீபிகா இருவரும் 4 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளனர்.

ஆனால், இந்த முறை ஃபராஹ்கானுக்குப் பதிலாக வைபவி மெர்சண்ட் இப்பாடலுக்கு கோரியோகிராபி செய்கிறார். இந்தப் பாடலை முடித்துவிட்டு மீண்டும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க அட்லீ திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே ஒருமுறை ரிலீஸ் தேதியை மாற்றிய ஜவான் படக்குழு, மீண்டும் அப்படி நடந்துவிடக் கூடாது என ரொம்பவே கேர் எடுத்து கவனித்து வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X