Jawan: ஷாருக்கானை ஆள் அடையாளமே இல்லாமல் மாற்றிய அட்லீ... கதிகலங்க வைக்கும் ஜவான் போஸ்டர்
மும்பை: ஷாருக்கான் - இயக்குநர் அட்லீ காம்போவில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான்.
இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.
இந்த வாரம் தொடக்கத்தில் ஜவான் படத்தின் ப்ரிவீயூ வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ஷாருக்கானின் நியூ லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார் அட்லீ.

ஆள் அடையாளமே இல்லாமல் மாறிய ஷாருக்கான்:பதான் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த ஷாருக்கான், அடுத்து ஜவானாக அதிரடி காட்டவுள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். கோலிவுட் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜூன் 2ம் தேதி வெளியாகவிருந்த ஜவான், தற்போது செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனிடையே படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்ட அட்லீ, இந்த வாரம் ஆரம்பத்தில் ஜவான் ப்ரிவியூ வீடியோவை வெளியிட்டார்.
ஷாருக்கானின் ஆக்ஷன் ட்ரீட்டாக வெளியான இந்த ப்ரிவியூ வீடியோ, ஜவான் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்தது. இந்த வீடியோவில் ஷாருக்கானின் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் அதிக ஹைப் கொடுத்துள்ளது. வழக்கமாக ரொம்பவே இளமையான தோற்றத்தில் செம்ம Handsome-ஆக வைப் கொடுத்த ஷாருக்கான், மொட்டை தலையுடன் நடித்தும் மிரட்டியிருந்தார்.

"நான் வில்லனா வந்து நின்னா, என் முன்னாடி எந்த ஹீரோவும் நிக்க முடியாது" என பஞ்ச் கொடுத்த ஷாருக்கான், மொட்டை தலை லுக்கில் செம்ம டெர்ரராக மிரட்டினார். ஷாருக்கின் இந்த கெட்டப் ரசிகர்களிடம் வைரலானதைத் தொடர்ந்து, இதன் அபிஸியல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கூலர்ஸ் அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் செம்ம மாஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார் ஷாருக்கான்.
அவரது இந்த வெறித்தனமான லுக், ஜவான் படத்திற்கு இன்னும் ஹைப் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜவான் படத்தின் Worldwide தியேட்டர் ரைட்ஸை யாஷ் ராஜ் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்த அறிவிப்பில் தான் ஷாருக்கானின் புதிய லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











