Jawan: “என்னது கதையா..?” ஒரே வார்த்தையில் அட்லீயை சட்னி செய்த ப்ளூ சட்டை மாறன்!!
சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் நடித்துள்ள ப்ரியாமணியும் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், அட்லீ சொன்ன ஜவான் கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகக் கூறினார். இதனை வைத்து ஒரே வார்த்தையில் அட்லீயை பங்கமாக ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அட்லீயை சட்னி செய்த ப்ளூ சட்டை மாறன்: ஷாருக்கான் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஜவானை அட்லீ இயக்கியுள்ளார். ஷாருக்கான் - அட்லீ காம்போவில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு ஆகியோரும் இணைந்துள்ளனர்.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்குப் பின்னர் தமிழ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஷாருக்கானின் படமாக ஜவான் காணப்படுகிறது. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார் ப்ரியாமணி. அப்போது முதலே ஷாருக்கானும் ப்ரியாமணியும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தான் ஜவான் படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டருக்காக ப்ரியாமணியை புக் செய்தார் ஷாருக்கான்.
சென்னை எக்ஸ்பிரஸ் போலவே ஜவான் படத்திலும் ஷாருக்கானுடன் இணைந்து ஆட்டம் போட்டு அசத்தியுள்ளார் ப்ரியாமணி. இந்நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ப்ரியாமணி ஷாருக்கான் குறித்தும், இயக்குநர் அட்லீ பற்றியும் பேசியிருந்தார். அதாவது, "ஜவான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு அட்லீ தான் முதல் காரணம். ஜூம் காலில் எனக்கு அட்லீ கதை சொன்னபோது ரொம்பவே பிடித்திருந்தது. அதனால் தான் உடனே ஓக்கே சொன்னேன்" எனக் கூறியிருந்தார்.
அதேபோல், "சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்குப் பின்னர் மீண்டும் ஷாருக்கானுடன் நடிப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை" என பேசியிருந்தார். இதில், ஜவான் படத்தின் கதை குறித்து ப்ரியாமணி பேசியதை பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். வழக்கமாகவே அட்லீ இயக்கிய படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்குவதை பார்க்க முடியும். ராஜா ராணி முதல் மெர்சல் வரை, அட்லீயின் அனைத்துப் படங்களும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கின.
இப்போது அவர் இயக்கியுள்ள ஜவானும் விஜயகாந்த் படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இதனை நேரடியாக குறிப்பிடாமல் "என்னது... கதையா..?" என ஒற்றை வார்த்தையில் பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இத்தனை நாட்களாக ஜெயிலர் படத்தை வைத்து ரஜினியை ட்ரோல் செய்த ப்ளூ சட்டை மாறன், தற்போது வண்டியை அட்லீ பக்கம் திருப்பியுள்ளது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











