Jawan: “ரஜினி மாதிரி டான்ஸ் ஆட தெரியாதா..?” ஷாருக்கானையும் சோலி முடித்த ப்ளூ சட்டை
சென்னை: ஷாருக்கான், அட்லீ, விஜய் சேதுபதி, அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான்.
பான் இந்தியா படமான ஜவான், செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஜவான் இசை வெளியீட்டு விழாவில், ரஜினி, விஜய் மாதிரியெல்லாம் நடனம் ஆட முடியாது என ஷாருக்கான் பேசியிருந்தார்.

இதில் ரஜினியின் நடனத்தை குறிப்பிடும் விதமாக ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளது வைரலாகி வருகிறது.
ரஜினி மாதிரியெல்லாம் டான்ஸ் ஆட முடியாது: ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடந்த இந்நிகழ்ச்சியில், ஷாருக்கான், விஜய் சேதுபதி, அட்லீ, அனிருத், ப்ரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முதலில் ஜவான் படத்தின் பாடல்களை லைவ்-ஆக பெர்ஃபாமன்ஸ் செய்தார் அனிருத்.

அதன் பின்னர் அட்லீ, விஜய் சேதுபதி, ஷாருக்கான் உள்ளிட்ட ஜவான் படக்குழுவினர் ரசிகர்கள் முன் பேசினர். ஷாருக்கான் பேசியபோது விஜய் சேதுபதியிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஹீரோவாக இருப்பதை விட அவர்போன்ற மனிதர்களிடம் இருந்து கிடைக்கும் அனுபவங்கள் அதிகம் எனக் கூறினார். அதேபோல், அனிருத் தனது மகன் போல என ஷாருக்கான் கூறியதும் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய ஷாருக்கான், "ரஜினி, விஜய் மாதிரியெல்லாம் டான்ஸ் ஆடமாட்டேன் என ஷோபி மாஸ்டரிடம் கூறியதாக" தெரிவித்தார். ஷாருக்கான் கொடுத்த இந்த கன்டென்ட்டை கெட்டியாக பிடித்துக்கொண்ட ப்ளூ சட்டை மாறன், ரஜினியுடன் ஷாருக்கானையும் சேர்த்து கலாய்த்து வருகிறார். ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா பாடல் வெளியான போதே ரஜினியின் நடனத்தை பங்கம் செய்திருந்தார் ப்ளூ சட்டை.

அதாவது காவாலா பாடலில் தமன்னா ரசிகர்களை கிறங்கடித்துக் கொண்டிருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினி சைடு கேப்பில் உள்ளே வந்து சின்னதாக ஒரு ஸ்டெப் போட்டுவிட்டு காணாமல் போய்விடுவார். இதனை "சித்தப்பூ நீங்க எப்போ வந்தீங்க" என வடிவேலுவின் மீம்ஸ் போட்டு கலாய்த்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். அதுமட்டும் இல்லாமல் ரஜினிக்கு பெரிதாக நடனம் ஆட வராது என்பது அனைவரும் அறிந்ததே.
அதனால், ஷாருக்கான் பேசியதை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "ரஜினி மாதிரியா" என செம்ம ஷார்ப்பாக பஞ்ச் வைத்து முடித்துள்ளார். அதாவது ரஜினி டான்ஸ்லாம் ஆடுவாரா என கேட்பதை போல ப்ளூ சட்டை மாறன் ட்விட் செய்துள்ளது தலைவர் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது. ரஜினி மீது ப்ளூ சட்டை மாறனுக்கு தீராத வன்மம் என்றெல்லாம் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











