Jawan Day 3 Collection: அப்போ அட்லீக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் தான்..?” வசூலில் சாதனை படைத்த ஜவான்!
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது.
அட்லீ இயக்கியுள்ள இந்தப் படம் கடந்த 7ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
முதல் நாளில் இருந்தே சிறப்பான ஓப்பனிங் கிடைத்துள்ள ஜவான் படத்தின் மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
இரண்டு நாட்களில் 240 கோடி வசூலித்த ஜவான், மூன்றாவது நாளில் 300 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்து சாதனை படைத்துள்ளது.

ஜவான் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் திரைப்படம், மூன்று தினங்களுக்கு முன்னர் வெளியானது. பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், கோலிவுட் இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவான இந்தப் படம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்த ஜவான், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான பதான், ஒட்டுமொத்தமாக 1200 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அதன் காரணமாகவே ஜவான் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஜவான், முதல் நாளிலேயே வசூலில் சாதனை படைத்தது. அட்வான்ஸ் புக்கிங் மூலம் மட்டுமே 50 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்திருந்தது.
அதுமட்டும் இல்லாமல் முதல் நாளிலேயே 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த ஜவான், மொத்தம் 130 கோடி வசூலித்ததாக படக்குழு அபிஸியலாக அறிவித்தது. அதேபோல், இரண்டாவது நாளில் 110 கோடி வசூல் என, முதல் இரண்டு நாட்களில் 240 கோடி வரை கலெக்ஷன் செய்தது. இதனால், வார இறுதி நாட்களில் ஜவான் கலெக்ஷன் இன்னும் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்துள்ளது ஜவான் மூன்றாவது நாள் வசூல் ரிப்போர்ட்.
அதன்படி, ஜவான் திரைப்படம் மூன்று நாளில் 350 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உலகம் முழுவதும் 350 கோடி வரை வசூலித்துள்ள ஜவான், பாலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் புதிய சாதனை படைத்துள்ளது. அதேபோல், இந்தி வெர்ஷனில் மட்டுமே ஒரே நாளில் 70 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் ஜவான் தான் என சொல்லப்படுகிறது.
மூன்றே நாட்களில் 350 கோடி வசூலை கடந்த ஜவான், வார இறுதி நாளான இன்று (செப் 10 - ஞாயிறு) மேலும் 100 கோடி வசூலித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜவான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 5 நாட்களில் 500 கோடியை கடந்துவிடும் என சொல்லப்படுகிறது. ஷாருக்கானுக்காக அசுரத்தனமான வெற்றியை கொடுத்துள்ளார் அட்லீ. இதனால், அட்லீயை வெயிட்டாக கவனிக்க ரெடியாகிவிட்டாராம் ஷாருக்கான்.
விக்ரம் வெற்றிக்கு லோகேஷுக்கு லம்போகினி கார் பரிசு கொடுத்தார் கமல். மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு மினி கூப்பர் காரை அன்பளிப்பாக கொடுத்தார் உதயநிதி. அதேபோல், ஜெயிலர் வெற்றிக்காக இயக்குநர் நெல்சனுக்கு போர்சே கார் பரிசாக கிடைத்தது. இந்த வரிசையில், இயக்குநர் அட்லீக்கு ஷாருக்கான் ரோல்ஸ் ராய்ஸ் கார் கூட பரிசாக கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவான் படத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலரும் ஷாருக்கானுடன் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையும் இந்தப் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. பதானை தொடர்ந்து ஷாருக்கானின் ஜவானும் ஆயிரம் கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











