Jawan Day 4 Collection: பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வசூல்... ஜவான் கொடுத்த லைஃப் டைம் செட்டில்மென்ட்!

சென்னை: ஷாருக்கான் அட்லீ கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் கடந்த வாரம் 7ம் தேதி வெளியானது.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான ஜவான் படத்துக்கு முதல் நாளில் இருந்தே சிறப்பான ஓபனிங் கிடைத்தது.

தினமும் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து வரும் ஜவான், முதல் வாரமே பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

அதன்படி, முதல் நான்கு நாட்களில் மட்டும், ஜவான் படத்தின் கலெக்‌ஷன் 500 கோடியை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 Jawan Box Office Day 4: Shah Rukh Khans Jawan has crossed Rs 500 crore in four days

500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்த ஜவான்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கிய திரைப்படம் ஜவான். கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாகி வந்த இந்தப் படம், செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அட்லீயை போலவே அனிருத்தும் இந்தப் படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

வழக்கமான தனது கமர்சியல் ஃபார்முலாவை கையில் எடுத்த அட்லீ, ஜவானில் ஷாருக்கானின் ஸ்டைலிஷ் ப்ளஸ் ஆக்‌ஷன் ட்ரீட்டுடன் படத்தை ஹிட் கொடுத்துவிட்டார். பல படங்களின் கதை, காட்சிகளை உருவி தான் ஜவான் முழுமையாகியுள்ளது என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதனையெல்லாம் கடந்து ஜவான் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது. முதல் நாளிலேயே வசூலில் சாதனை படைத்தது. அட்வான்ஸ் புக்கிங் மூலம் 50 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்திருந்தது.

முதல் நாள் முடிவில் மொத்தம் 130 கோடி வசூலித்ததாக படக்குழு அபிஸியலாக அறிவித்தது. அதேபோல், இரண்டாவது நாளில் 110 கோடி வசூல் என, முதல் இரண்டு நாட்களில் 240 கோடி வரை கலெக்‌ஷன் செய்தது. மூன்றாவது நாளில் 350 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், நேற்று மாலை வெளியான படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 385 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதல் வார இறுதியான நேற்றும் (செப்.10) ஜவான் வசூலில் மாஸ் காட்டியுள்ளது. அதன்படி ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் 120 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது ஜவான். இதனடிப்படையில், 4 நாட்களில் மொத்தம் 500 கோடி வசூலை கடந்துள்ளதாம். இது கடந்த ஜனவரி மாதம் வெளியான ஷாருக்கானின் பதான் படத்தின் முதல் வார கலெக்‌ஷனை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லீயின் முதல் இந்தி படமான ஜவான், தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருவது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. அதேநேரம் இந்தப் படம் விரைவில் ஆயிரம் கோடி வசூலை கடக்கும் எனவும், அது நடந்துவிட்டால், கோலிவுட்டில் முதல் ஆயிரம் கோடி கலெக்‌ஷன் கொடுத்த இயக்குநர் என்ற பெருமையை அட்லீ தட்டிச் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X