Jawan Box Office: ஜவான் ஒரேநாளில் 130 கோடி வசூல்... பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய ஷாருக்கான்!

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் நேற்று வெளியானது.

அட்லீ இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான ஜவான், பாசிட்டிவான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால் முதல் நாளிலேயே ஜவான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தரமான சம்பவம் செய்துள்ளது.

அதன்படி ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 130 கோடி என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 Jawan Box Office: Shah Rukh Khans Jawan collected Rs 130 crore on its first day

ஜவான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் அபிஸியல் அப்டேட்: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம், நேற்று முதல் உலகமெங்கும் வெளியானது. இந்தியில் அட்லீ இயக்கிய முதல் திரைப்படம் என்பதால், பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட் ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதனால், ஜவான் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தி மாஸ் காட்டினார் ஷாருக்கான்.

ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், அவருடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார். ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி 1200 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால், ஜவான் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில், நேற்று வெளியான ஜவானுக்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.

இதனையடுத்து தற்போது ஜவான் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது. அதன்படி, ஜவான் திரைப்படம் முதல் நாளில் 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். இது ஷாருக்கானின் பதான், ரஜினியின் ஜெயிலர் படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டும் 90 கோடி ரூபாய் வசூல் என சொல்லப்படுகிறது.

 Jawan Box Office: Shah Rukh Khans Jawan collected Rs 130 crore on its first day

இந்தியாவில் ஜவான் இந்தி வெர்ஷன் 75 கோடியும், தமிழ் வெர்ஷன் 8 கோடியும், தெலுங்கு வெர்ஷன் 7 கோடியும் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜவான் திரைப்படம் ஒரே நாளில் 100 கோடி வசூலை கடந்துள்ளது சினிமா கோலிவுட்டையும் பாலிவுட்டையும் அதிர வைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த வார இறுதிக்குள் 500 கோடி வரை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லீயின் முதல் பாலிவுட் என்ட்ரியே, இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்துள்ளதால், அவரது அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே அட்லீயின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஹீரோ யார் என்ற எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம் பாலிவுட் ஹீரோக்களும் அட்லீக்கு வலை வீசி வருவதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X