Jawan Box Office: பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கவிடும் ஜவான்... ரிக்கார்ட் பிரேக்கிங் வசூல்!!

சென்னை: ஷருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவான ஜவான், கடந்த 7ம் தேதி வெளியானது.

உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பக்கா கமர்சியலாக உருவாகியுள்ள ஜவான், ஷாருக்கான் ரசிகர்களுக்கு ஃபேன் பாய் சம்பவமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு நாட்களில் ஜவான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 Jawan Box Office: Shah Rukh Khans Jawan collected Rs 240 crore in two days

ஜவான் பாக்ஸ் ஆபிஸ் அபிஸியல் அப்டேட்: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் முதன்முறையாக பாலிவுட் சென்றுள்ள அட்லீ, முதல் சம்பவத்தையே தரமாக செய்துள்ளார். பாலிவுட் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் எதிர்பார்க்க வைத்தது ஜவான். அதன்படி, செப்டம்பர் 7ம் தேதி வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலரும் ஷாருக்கானுடன் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையும் இந்தப் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. முன்னதாக ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி 1200 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால், ஜவான் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியான ஜவான் முதல் நாளில் மட்டுமே 130 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதனையடுத்து தற்போது ஜவான் படத்தின் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டாவது நாளில் 110 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் 240 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளது.

 Jawan Box Office: Shah Rukh Khans Jawan collected Rs 240 crore in two days

இது ஷாருக்கானின் பதான், ரஜினியின் ஜெயிலர் படங்களின் இரண்டு நாள் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் முதல் வாரம் முடிவுக்குள் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லீக்கு பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள ஜவான், இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்துள்ளது. இதனால் அவரது அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் விஜய் ஹீரோவாக நடிப்பாரா எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜவான் சாதனை படைத்தாலும், அட்லீயின் கதை திருட்டு சர்ச்சை நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. தனது படங்களின் கதையுடன், மற்ற கதைகளையும் கலந்துகட்டி அடித்து வருகிறார் என தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஜவான் ஹிட்டாக ஷாருக்கான் மட்டுமே காரணம் எனவும் அவர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X