Jawan Box Office: ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த ஜவான்... ஷாருக்கான் கொடுத்த அபிஸியல் அப்டேட்!

சென்னை: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்த ஜவான், இந்த மாதம் 7ம் தேதி வெளியானது.

அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது.

இதனால் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் சாதனைப் படைத்து வந்த ஜவான், தற்போது 1000 கோடி கலெக்‌ஷன் செய்துள்ளது.

ஜவான் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 Jawan Box Office: Shah Rukh Khans Jawan has crossed Rs 1000 crore in Box Office

1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் ஜவான்: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான பதான், 1200 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியது. அதனைத் தொடர்ந்து இந்த மாதம் 7ம் தேதி வெளியான ஜவானும் தற்போது ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளது. ஒரே ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி, அவை இரண்டுமே ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானே சொந்தமாக தயாரித்துள்ள ஜவான், ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியிருந்தது. ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அதேபோல், அனிருத்தும் இந்தப் படம் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் அறிமுகமானார். ஜவான் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் தவிர, அட்லீ முதல் அனிருத் வரை பலரும் கோலிவுட்டைச் சேர்ந்தவர்கள்.

இதனால், ஜவானுக்கு இந்தியில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி, இம்மாதம் 7ம் தேதி வெளியான ஜவன், முதல் நாளில் இருந்தே வசூலில் மாஸ் காட்டியது. முதல் நாளில் 125, இரண்டாவது நாளில் 109, மூன்றாவது நாளில் 140, 4வது நாளில் 156 கோடி என, முதல் நான்கு நாட்களும் 100 கோடிக்கும் குறைவில்லாமல் வசூலித்தது.

அதன்பின்னர் வசூலில் கொஞ்சம் ஏமாற்றம் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் கலெக்‌ஷனில் ஜவான் புதிய சாதனை படைத்து வந்தது. இதனால், விரைவில் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் ஜவான் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை தற்போது சாதித்துக் காட்டியுள்ளது ஜவான். அதன்படி இதுவரை 1004 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக ஜவான் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் முதன்முறையாக ஆயிரம் கோடி வசூலில் இணைந்த கோலிவுட் இயக்குநர் என்ற பெருமை அட்லீக்கு கிடைத்துள்ளது. அதேநேரம் இது அட்லீயின் வெற்றி கிடையாது எனவும், ஷாருக்கான் நடிக்கவில்லை என்றால், ஜவான் 200 கோடி ரூபாய் கூட வசூல் செய்திருக்காது என்றும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஷாருக்கானால் மட்டுமே ஜவான் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக நெட்டிசன்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X