Jawan Box Office: "அட்லீயின் ஆட்டம் ஓவர்...” ஒரே வாரத்தில் ஓய்ந்து போன ஜவான் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!
சென்னை: ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம், கடந்த வாரம் 7ம் தேதி ரிலீஸானது.
அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ஜவான், முதல் நான்கு நாட்களும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டியது.
தினமும் 100 கோடிகளுக்கு குறையாமல் வசூலித்த ஜவான், கடந்த இரு தினங்களாக பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வருகிறது.
முதல் வாரம் முடிவில் ஜவான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜவான் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் - கோலிவுட் கமர்சியல் இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவான திரைப்படம் ஜவான். கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாகி வந்த ஜவான், கடந்த வாரம் வெளியானது. முன்னதாக ஜூன் 2ம் தேதி ரிலீஸாகவிருந்த இந்தப் படம், செப்டம்பர் 7ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. அட்லீயின் முதல் பாலிவுட் என்ட்ரியாக ஜவான் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அட்லீயை போலவே ராக்ஸ்டார் அனிருத்துக்கும் ஜவான் தான் பாலிவுட்டின் முதல் படமாக அமைந்துள்ளது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பக்கா கமர்சியல் படமாக ஜவானை இயக்கியுள்ளார் அட்லீ. ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதோடு, ஆக்ஷனிலும் செம்ம மாஸ் காட்டியுள்ளார்.
அதேநேரம் ஜவான் கதை குறித்து பலவிதமான சர்ச்சைகள் வந்த போதும், ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடித் தீர்த்துள்ளனர். பாலிவுட் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு ரசிகர்களிடமும் ஜவானுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைத்தது. முதல் நாளில் 130 கோடி, இரண்டாவது நாளில் 110 கோடி, மூன்றாவது நாளில் 144 கோடி, நான்காவது நாளில் 136 கோடி ரூபாய் வசூலித்தது.

இதன் மூலம் நான்கே நாட்களில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது ஜவான். மேலும் வார இறுதியான ஞாயிற்றுக் கிழமை 120 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஆனால், அதன்பின்னர் ஜவான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எதிர்பார்த்தளவில் இல்லையென்றே சொல்லப்படுகிறது. இரண்டாவது வாரத்திற்குள் ஆயிரம் கோடி வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் 700 கோடி ரூபாய் கூட கலெக்ஷன் ஆகவில்லையாம்.
அதன்படி, ஜவான் படத்தின் முதல் 6 நாள் வசூல் 600 கோடியை கடந்த நிலையில், 7வது நாளான நேற்றும் பெரிதாக கலெக்ஷன் ஆகவில்லை என்றேத் தெரிகிறது. அதனடிப்படையில் நேற்றைய ஜவான் வசூல் 30 முதல் 50 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால், முதல் வாரத்தின் முடிவில் மொத்தம் 650 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது ஜவான். இதனால், ஜவான் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிப்பது கஷ்டம் என்றே பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











