Jawan Box Office: ஜவான் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் வசூல்... இதுக்கு மேல செல்ஃப் எடுக்குமா..?
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் கடந்த வாரம் 7ம் தேதி வெளியானது. இந்தியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
முதல் நான்கு நாட்கள் வசூலில் சக்கைப்போடு போட்ட ஜவான், தற்போது தடுமாறி வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி, ஜவானின் முதல் 8 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜவான் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கிய திரைப்படம் ஜவான். கோலிவுட்டில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியிருந்த அட்லீ, ஜவான் மூலம் முதன் முறையாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே ஷாருக்கானுடன் அவர் இணைந்தது, கோலிவுட் ரசிகர்களையே ஆச்சரியப்பட வைத்தது. அதன்படி ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவான ஜவான், கடந்த வாரம் வெளியானது.
ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்த ஜவான், 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாம். ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் ஷாருக்கான் நடிக்க, அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். ஆக்ஷன் ஜானரில் பக்கா கமர்சியல் படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது ஜவான்.
அதேநேரம் வழக்கம்போல அட்லீ பல படங்களில் இருந்து சில மாஸ் காட்சிகளையும், கதைகளையும் மிக்ஸ் செய்து ஜவானை இயக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து அட்லீயும் ஓபனாக விளக்கம் கொடுத்திருந்தார். கதை குறித்த சர்ச்சைகள் இருந்தாலும், ஜவானின் மேக்கிங், ஷாருக்கானின் நடிப்பு ஆகியவை ரசிகர்களுக்கு திருப்தியளித்துள்ளது. இதனால், ஷாருக்கானின் ஜவான் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அதாவது ஜவான் வெளியான நான்கே நாட்களில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து மாஸ் காட்டியது. முதல் 5 நாட்களும் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலித்த ஜவான், அதன்பின்னர் தடுமாறி வருகிறது. முதல் 6 நாள் வசூல் 600 கோடியை கடந்த நிலையில், 7வது நாளிலும் பெரிதாக கலெக்ஷன் ஆகவில்லை. நேற்று வெளியான அபிஸியல் அப்டேட்டில் ஜவான் மொத்த வசூல் 660 கோடி ரூபாய் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் முதல் வாரத்தை கடந்து ஜவான் படத்தின் 8 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 8வது நாளான நேற்று 30 முதல் 40 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும், ஆகமொத்தம் பாக்ஸ் ஆபிஸில் 700 கோடி கலெக்ஷனை ஜவான் நெருங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் இரண்டாவது வாரத்திலேயே ஜவான் வசூல் ஆயிரம் கோடியை கடந்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் எதிர்பார்த்தன. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லையென தற்போது தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











