Jawan Box Office: பாக்ஸ் ஆபிஸில் மல்லுக் கட்டும் ஜவான்... பாலிவுட்டில் சாதித்துக் காட்டிய அட்லீ!!
சென்னை: அட்லீ இயக்கிய முதல் இந்தித் திரைப்படமான ஜவான், கடந்த வாரம் 7ம் தேதி வெளியானது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஹீரோவாக நடித்த இந்தப் படம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸாகியிருந்தது.
ஆக்ஷன் ஜானரில் கமர்சியல் படமாக வெளியான ஜவான், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், 10 நாட்களில் ஜவான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்ஸ் ஆபிஸில் மல்லுக் கட்டும் ஜவான் : பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம், கடந்த வாரம் 7ம் தேதி வெளியானது. கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற இயக்குநர் அட்லீ, முதல் படமான ஜவானில் ஷாருக்கானுடன் இணைந்து மாஸ் காட்டியுள்ளார். தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியிருந்த அட்லீ, ஜவான் மூலம் பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்த ஜவான், ஒருவழியாக செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸானது. ஷாருக்கான் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அவருடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு என பலரும் நடித்திருந்தனர். மக்களுக்காக சைலண்ட் மோடில் சீக்ரெட் ஆப்ரேஷன் நடத்தும் மகன் ஷாருக்கானுக்கு, அப்பா ஷாருக் எப்படி உதவுகிறார் என்பது தான் ஜவானின் கதை.
அப்பா ஷாருக்கானின் விக்ரம் ரத்தோர் கேரக்டர் ரசிகர்களுக்கு செம்ம ஆக்ஷன் ட்ரீட் கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் கதை, திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும், மேக்கிங்கில் மிரட்டியிருந்தார் அட்லீ. ஒட்டுமொத்தமாக கலவையான விமர்சனங்களைப் பெற்ற ஜவான், பாக்ஸ் ஆபிஸில் ரியலான சம்பவம் செய்தது. முதல் நாளிலேயே 120 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதோடு முதல் 5 நாட்களும் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் ஜவான் படத்தின் வசூல் கணிசமாக குறைந்துவிட்டது. இந்நிலையில் ஜவான் 9 நாட்களில் 735 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. அதேநேரம் விநாயகர் சதுர்த்தி விடுமுறையால், மீண்டும் ஜவான் படத்திற்கு ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். அதன்படி இதுவரை ஜவான் திரைப்படம் 780 முதல் 800 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் ஜவான் சக்சஸ் மீட் மும்பையில் நடைபெற்றது. ஷாருக்கான், விஜய் சேதுபதி, அட்லீ, தீபிகா படுகோன் ஆகியோர் ஜவான் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்டனர். ஜவான் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, சக்சஸ் மீட்டிங்கிலும் நயன்தாரா பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது. இன்னொரு பக்கம் ஜவான் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க அட்லீ ரெடியாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகி, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











