Jawan Box Office: 800 கோடி பாக்ஸ் ஆபிஸ் க்ளப்பில் இணைந்த ஷாருக்கானின் ஜவான்... குருவை மிஞ்சிய அட்லீ!
சென்னை: ஷருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் கடந்த 7ம் தேதி வெளியானது. இந்தியில் உருவான ஜவான், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
முதல் நான்கு நாட்களில் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த ஜவான், அதன் பின்னர் தடுமாறியது. இந்நிலையில், 11 நாள் முடிவில் ஜவான் திரைப்படம் 800 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளது.

800 கோடி க்ளப்பில் இணைந்த ஜவான்: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம், கடந்த ஜனவரி மாதம் வெளியானது. ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான பதான், பாய்காட் பிரச்சினைகளையும் கடந்து சாதனை படைத்தது. பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்த பதான், ஷாருக்கானுக்கு பெரிய கம்பேக் கொடுத்தது. இதனால், ஜவான் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
இந்நிலையில், இந்த மாதம் 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படத்துக்கும் பாய்காட் பிரச்சினைகள் எழுந்தன. ஆனால், அதையெல்லாம் அசுரத்தனமாக அடித்து நொறுக்கியுள்ளது ஜவான். இந்தப் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் இயக்குநர் அட்லீ. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியிருந்த அட்லீ, ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்தார். இறுதியாக இக்கூட்டணியில் வெளியான ஜவான், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர், அனிருத் இசையமைத்திருந்தார். வழக்கமாக மக்களுக்கான அரசியல், சமூகப் பார்வை, லஞ்சம், ஊழலை ஒழிப்பது என கமர்சியல் படமாக ஜவான் உருவாகியிருந்தது. இதனை கலர்ஃபுல் விஷுவல் ட்ரீட்டாக கொடுத்து ஜவான் படத்தை ஹிட்டாக்கிவிட்டார் அட்லீ. அதேநேரம் பாக்ஸ் ஆபிஸிலும் ஜவான் மாஸ் காட்டியுள்ளது.
முதல் நாளில் 120 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த ஜவான், தொடர்ந்து 5 நாட்களும் 100 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்தது. இதன் காரணமாக முதல் வார இறுதிக்குள்ளாகவே 600 கோடி ரூபாய் வரை வசூலித்துவிட்டது ஜவான். ஆனால், அதன் பின்னர் பெரியளவில் கலெக்ஷ இல்லை எனத் தெரிகிறது. இரண்டாவது வாரம் இதுவரை 200 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. ஆகமொத்தம் 10 நாட்களில் 800 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாம்.
தமிழ்நாட்டில் மட்டும் ஜவான் வசூல், 60 முதல் 70 கோடி ரூபாய் வரை என சொல்லப்படுகிறது. இதனால் அட்லீயின் அடுத்தப் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனிடையே கோலிவுட் இயக்குநர்களில் 800 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த இரண்டாவது நபராக அட்லீ சாதனை படைத்துள்ளார். முன்னதாக அவரது குரு இயக்குநர் ஷங்கர், 2.O படத்தின் மூலம் 800 கோடி வசூல் செய்தார். இப்போது அந்த சாதனையை பாலிவுட் சென்று ஜவான் படம் மூலம் பிரேக் செய்துள்ளார் அட்லீ.


Click it and Unblock the Notifications