Jawan Box Office: பாக்ஸ் ஆபிஸில் ஜவானின் அடுத்த சாதனை... ஷருக்கானுக்கு அட்லீயால் அடித்த ஜாக்பாட்!

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் கடந்த 7ம் தேதி வெளியானது.

அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்துக்கு, முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது.

இதனால், இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது ஷாருக்கானின் ஜவான்.

இந்நிலையில், ஜவான் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

 Jawan Box Office: Shah Rukh Khans Jawan has crossed Rs 900 crore in Box Office

பாக்ஸ் ஆபிஸில் ஜவான் சாதனை: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் - கோலிவுட் இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவான திரைப்படம் ஜவான். பதான் திரைப்படம் கொடுத்த சூப்பர் ஹிட்டால், ஜவானையும் இந்தாண்டே களமிறக்கினார் ஷாருக்கான். அதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த ஜனவரியில் வெளியான பதான், பாக்ஸ் ஆபிஸில் 1,200 கோடி ரூபாய் வசூலித்தது. இப்போது ஜவானும் அந்த சாதனையை நெருங்கிவிட்டது.

ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவான ஜவான், இந்த மாதம் 7ம் தேதி வெளியானது. இந்தியில் உருவான இந்தப் படம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முதல் நாளில் இருந்தே ஜவான் படத்தின் டிக்கெட் புக்கிங் சாதனை படைத்திருந்தது. அதாவது படம் வெளியாகும் முன்பு நடைபெற்ற அட்வான்ஸ் புக்கிங் மூலம் மட்டுமே 50 கோடி ரூபாய் வசூலித்தது.

அப்போது தொடங்கிய ஜவான் சுனாமி, தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் அதிகமாக இருந்தது. அதாவது முதல் 5 நாட்களுமே 100 கோடிக்கும் மேலாக வசூலித்தது. இதனால், நான்கே நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை கடந்தது ஜவான். அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் சம்பவம் செய்த ஜவான், தற்போது பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி சாதனையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

 Jawan Box Office: Shah Rukh Khans Jawan has crossed Rs 900 crore in Box Office

ஜவான் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்துவிட்ட நிலையில், இதுவரை 907 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக, படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது. கோலிவுட் இயக்குநரின் திரைப்படம் 900 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை அட்லீ செய்துகாட்டியுள்ளார். அதேநேரம், ஜவான் விரைவில் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் க்ளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள ஜவான், ஷாருக்கான் ரசிகர்களுக்கு ஃபேன் பாய் சம்பவமாகவே அமைந்துள்ளது. அதேபோல், இதுவரை கோலிவுட்டில் மட்டுமே மாஸ் காட்டி வந்த அட்லீக்கு, பாலிவுட்டிலும் சிறப்பான என்ட்ரி கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X